ஆன்மிக களஞ்சியம்
null

நினைத்து பார்க்க முடியாத நன்கொடை

Published On 2024-06-25 12:00 GMT   |   Update On 2024-06-28 07:06 GMT
  • உங்கள் அனவைருக்கும் கொடுத்த பிறகும் என்னிடம் ஏராளமாகப் பணம் இருக்கிறது.
  • அதை தர்ம காரியங்களுக்கு செலவிட முடிவு செய்திருக்கிறேன் என்றார்.

உலகப் பெரும் கோடீஸ்வராக விளங்கியவர் ஹென்றி போர்டு. ஒருநாள் அவர் தன்னுடைய உறவினர்களை விருந்துக்கு அழைத்தார்.

விருந்தின்போது, தன்னுடைய செயலாளரை விட்டு ஒவ்வொருவரிடமும் ஒரு துண்டுக் காகிதத்தைக் கொடுக்கச் சொன்னார்.

அதில் அவர் தன்னிடமிருந்து எதிர் பார்க்கின்ற அதிகபட்சமான தொகையினை குறிக்கச் சொன்னார்.

ஒருவரை ஒருவர் கலந்து ஆலோசிக்காமல் அந்த தொகையை குறிப்பிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

எல்லோரும் தொகை எழுதிய பிறகு, போர்டின் செயலாளர் அந்து துண்டுக் காகிதங்களைச் சேகரித்து கொடுத்தார்.

எல்லாக் காகிதங்களையும் பரிசீலித்து அதிகபட்சத் தொகையினை யார் எழுதியிருக்கிறார்கள் எனக் குறித்துக் கொண்டார் போர்டு.

பிறகு உறவினர்களைப் பார்த்து, "உங்களில் யாரோ ஒருவர் கேட்டிருக்கின்ற அதிகபட்சத் தொகை இதுதான். அந்தத் தொகையினை உங்கள் ஒவ்வொருவருக்கும் கொடுக்க முடிவு செய்து விட்டேன்.

உங்கள் அனவைருக்கும் கொடுத்த பிறகும் என்னிடம் ஏராளமாகப் பணம் இருக்கிறது. அதை தர்ம காரியங்களுக்கு செலவிட முடிவு செய்திருக்கிறேன் என்றார்.

பிறகு அவர் "போர்டு பவுண்டேஷன்" என்கிற அமைப்பினை நிறுவி அமெரிக்காவின் நகரங்களில் மருத்துவமனைகள், கல்விக் கூடங்கள் நிறுவ தனது சொத்தில் கணிசமானதை நன்கொடையாக கொடுத்து விட்டார்.

Tags:    

Similar News