ஆன்மிக களஞ்சியம்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முன்னோர்கள் கடைபிடித்த விசயங்கள்

Published On 2024-07-16 11:00 GMT   |   Update On 2024-07-16 11:00 GMT
  • வேப்பிலை, மஞ்சள், எலுமிச்சை மூன்றும் முக்கியம்
  • இந்த மூன்றும் ஆடி மாத காற்றில் வரும் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டவை.

ஆடி மாதம் பருவகால நிலைகளில் மாற்றம் உண்டாகும்.

இதன் காரணமாக ஆடி மாதம் காற்றின் வேகம் அளவுக்கு அதிகமாக இருக்கும்.

ஆடி காற்றில் அம்மியே பறக்கும் என்பார்கள்.

காற்று மிக வேகமாக வீசும் காரணத்தால் அதில் உள்ள கிருமிகளும் மிக வேகமாக மக்களிடையே பரவும்.

இதை அறிந்த நமது முன்னோர்கள் ஆடி மாதம் காற்றில் பரவும் கிருமிகளிடம் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள ஆன்மிகத்துடன் இணைந்து சில பழக்க வழக்கங்களை உருவாக்கி கடைபிடித்தனர்.

ஆடி காற்றில் வரும் கிருமிகள் உடலில் புகுந்து விட்டால் நோய் தாக்கம் ஏற்படுவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்து விடும்.

இதை கருத்தில் கொண்டு நமது முன்னோர்கள் ஆடி மாதம் முழுவதும் வேப்பிலை, மஞ்சள், எலுமிச்சை ஆகிய மூன்றையும் பயன்படுத்தும் வழக்கத்தை ஏற்படுத்தினார்கள்.

வேப்பிலை, மஞ்சள், எலுமிச்சை மூன்றும் முக்கியம்

இந்த மூன்றும் ஆடி மாத காற்றில் வரும் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டவை.

எனவே இதன் முக்கியத்துவத்தை மக்கள் மனதில் ஆழமாக பதிய செய்வற்காக ஆடி மாத அம்மன் வழிபாட்டுக்குள் இவற்றை கொண்டு வந்தனர்.

Tags:    

Similar News