ஆன்மிக களஞ்சியம்

பஞ்ச தீபம்

Published On 2024-02-24 13:16 GMT   |   Update On 2024-02-24 13:16 GMT
  • பைரவருக்கு சாம்பராணி தைல அபிஷேகமும் கதம்ப சாதம் நெய்வேத்தியமும் மிகவும் பிடித்தமானவை.
  • பைரவருக்கு பஞ்ச தீபம் ஏற்றி வழிபடுவதால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும்.

பைரவருக்கு மோட்ச தீபம்

மோட்சத்திற்கு அதிபதி சிவன் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அது தவறு. சிவனின் 64 அவதாரங்களில் ஒன்றான கால பைரவரே மோட்சத்துக்கு அதிபதி ஆவார்.

அதனால் தான் காசி தலத்திற்கு கால பைரவர் அதிபதியாக உள்ளார்.

ஒவ்வொருவருடமும் தர்ப்பணம் பூஜையை ஆற்று ஓரமும், கடற்கரை ஓரமும் அல்லது குருமார்களை வைத்து வீட்டிலும் செய்யலாம்.

வீட்டில் செய்யும் பூஜையை சிரார்த்தம்(திதி) பூஜை என்பார்கள். இறுதியாக பிண்டங்களை கடலிலோ,ஆற்றிலோ கரைக்கலாம்.

மோட்ச தீபம் சிவனுக்கு ஏற்றக்கூடாது.

அது பைரவருக்கு உரியது, சிரார்த்தம் பூஜை அல்லது மோட்ச தீபம் பைரவருக்கு ஏற்றி, மோட்சத்துக்குரிய அர்ச்சனை செய்த பின் கடைசியில் சிவனுக்கோ அல்லது விநாயகருக்கோ நெய்தீபம் ஏற்றி குடும்ப அர்ச்சனை மட்டும் செய்ய வேண்டும்.

பைரவருக்கு சாம்பராணி தைல அபிஷேகமும் கதம்ப சாதம் நெய்வேத்தியமும் மிகவும் பிடித்தமானவை.

எனவே இவற்றை எல்லா பூஜைகளுக்கும் பயன்படுத்தலாம்.

பஞ்ச தீபம்

பஞ்ச தீபம் என்பது விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் சேர்த்த எண்ணெய் ஆகும்.

இவற்றை தனித்தனியாக அகல்விளக்கில் ஏற்ற வேண்டும்.

பைரவருக்கு பஞ்ச தீபம் ஏற்றி வழிபடுவதால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும்.

Tags:    

Similar News