ஆன்மிக களஞ்சியம்

பூசணி தீபம்

Published On 2024-02-24 12:48 GMT   |   Update On 2024-02-24 12:48 GMT
  • கண்திருஷ்டி நாசம் விலகும். தீய சக்திகள் விலகி சத்ரு சம்ஹார பைரவரின் திருவருள் அனைவருக்கும் கிடைக்கும்.
  • இந்த யாகத்தால் எதிரிகளின் தொல்லைகள் விலகும்.

தட்சிண காசி கால பைரவருக்கு பூசணி தீபம் ஏற்றி வழிபட்டால், எதிரிகளின் தொல்லைகள் அகல்வதுடன், காரியங்கள் சித்தியாகும் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.

இது தவிர கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை அஷ்டமியன்று தட்சிண காசி காலபைரவருக்கு தேர்த் திருவிழாவும் நடைபெறுகிறது.

வரமிளகாய் யாகம்

பைரவர், பகுலாமுகி, மோகினி, சக்திகளை கலசத்தில் ஆவாகனம் செய்து பகுலாமுகிக்கு பிடித்த வரமிளகாய் , பைரவருக்கு பிடித்த மிளகும், மோகினி சக்திக்கும் பிடித்த வேப்பெண்ணை மற்றும் பூசணி கொண்டு யாகம் நடத்தப்படுகிறது.

இந்த யாகத்தால் எதிரிகளின் தொல்லைகள் விலகும்.

கண்திருஷ்டி நாசம் விலகும். தீய சக்திகள் விலகி சத்ரு சம்ஹார பைரவரின் திருவருள் அனைவருக்கும் கிடைக்கும்.

Tags:    

Similar News