ஆன்மிக களஞ்சியம்

ராமகிரிக்கு செல்வது எப்படி?

Published On 2024-05-29 11:20 GMT   |   Update On 2024-05-29 11:20 GMT
  • நாராயண வனத்தில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் இந்த தலம் உள்ளது.
  • நாராயண வனத்தில் புகழ் பெற்ற சுரைக்காய் சித்தர் ஆலயமும் சிவாலயமும் அமைந்துள்ளது.

அற்புதங்கள் நிறைந்த ராமகிரி கோவிலுக்கு சென்னையில் இருந்து மிக எளிதாக சென்று வரலாம்.

சென்னையில் இருந்து காரில் செல்பவர்கள் செங்குன்றம், பெரியபாளையம், ஊத்துக்கோட்டை வழியாக சென்றால் மிக எளிது.

ஊத்துக் கோட்டையை தாண்டியதும் நாகலாபுரம் வரும்.

அதை கடந்ததும் ராமகிரி ஊர்தான். சாலையின் வலது பக்கத்தில் பெரிய அலங்கார வளைவு கட்டப்பட்டுள்ளது.

அதன் வழியாக உள்ளே சென்றால் அந்த பாதை கோவிலில் சென்றுதான் நிற்கும்.

பஸ்சில் செல்பவர்கள் திருப்பதி செல்லும் பஸ்களில் செல்லலாம்.

எக்ஸ்பிரஸ் பஸ்களில் செல்லாமல் சாதாரண பஸ்களில் சென்றால் ராமகிரி பஸ் நிறுத்தத்தில் நிறுத்துவார்கள்.

அங்கிருந்து கோவிலுக்கு செல்ல ஆட்டோ வசதி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் வசிப்பவர்கள் பூண்டி, சீத்தஞ்சேரி, கச்சூர் வழியாக ஊத்துக்கோட்டைக்கு சென்று ராமகிரி செல்லலாம்.

சென்னையில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவில் ராமகிரி தலம் உள்ளது.

திருப்பதியில் 58 கிலோ மீட்டர் தொலைவிலும், நெல்லூரில் இருந்து 148 கிலோ மீட்டர் தொலைலிலும் அமைந்துள்ளது.

அருகில் உள்ள பீச்சாட்டூரில் இருந்து 4 கிலோ மீட்டர் கடந்தால் இந்த தலத்தை அடையலாம்.

நாராயண வனத்தில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் இந்த தலம் உள்ளது.

நாராயண வனத்தில் புகழ் பெற்ற சுரைக்காய் சித்தர் ஆலயமும் சிவாலயமும் அமைந்துள்ளது.

திருப்பதி, திருத்தணி, பெரியபாளையம் உள்ளிட்ட பல்வேறு புண்ணிய தலங்களுக்கு மையமாக ராமகிரி அமைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

எனவே ராமகிரியில் வழிபாடு செய்து விட்டு அருகில் உள்ள இந்த தலங்களுக்கும் சென்று வரும் வகையில் ஆன்மிக யாத்திரையை திட்டமிட்டு அமைத்துக் கொள்வது நல்லது.

Tags:    

Similar News