ஆன்மிக களஞ்சியம்

சிவம் இல்லையேல் சக்தி இல்லை! சக்தி இல்லையேல் சிவம் இல்லை!

Published On 2024-07-24 10:17 GMT   |   Update On 2024-07-24 10:17 GMT
  • இறைவன் எடுக்கும் மேனி போகி, யோகி, வேகி என்று மூன்று வகைப்படும்.
  • இதில் போகம் என்பது இன விருத்தியைக்குறிக்கும்.

இறைவன் எடுக்கும் மேனி போகி, யோகி, வேகி என்று மூன்று வகைப்படும்.

இதில் போகம் என்பது இன விருத்தியைக்குறிக்கும். உலகில் உள்ள 84 லட்சம் ஜீவன்களுக்கும் இறைவன் இந்த சக்தியை கொடுத்துள்ளான்.

சிவம் இல்லையேல் சக்தி இல்லை, சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்பதின் அடிப்படையில் சிவசக்தி சங்கமத்தால், இந்த உலகில் அனைத்தும் இயங்குகின்றன.

இறைவன் போக வடிவத்தில், அந்த தத்துவத்தில் இல்லாமல் போனால் உலகத்து உயிர்கள் எதுவும் போக வாழ்க்கை வாழ இயலாது.

இதை கருத்தில் கொண்டே ஆலயங்களில் இறைவனுக்கு திருக்கல்யாணம் செய்து வைக்கும் வைபவத்தை நம் முன்னோர்கள் ஏற்படுத்தினார்கள்.

அதோடு அந்த திருக்கல்யாணத்தை எப்படி நடத்த வேண்டும் என்ற ஆகம விதிகளையும் வகுத்து தந்துள்ளனர்.

நமது பெற்றோர் திருமணத்தை நாம் காண முடிவதில்லை.

என்றாலும் சஷ்டியப்பூர்த்தி விழா மூலம் பெற்றோர் திருமணத்தை மகன்களும் மகள்களும் கண்குளிர கண்டுகளிக்க முடிகிறது.

அது போல இறைவனது திருக்கல்யாணத்தை ஆண்டுக்கு ஒரு தடவை நடத்தி அவனது அருளை பக்தர்கள் பெற்று மகிழ்கிறார்கள்.

ஒரு இடத்தில் புதிதாக கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தினால், இறைவன், இறைவியின் திருக்கல்யாணத்தையும் நடத்துவார்கள்.

நம் முன்னோர்கள் இதை ஒரு மரபாகவே வைத்திருந்தனர்.

ஆனால் கும்பாபிஷேகம் நடத்தும் போது செய்யப்படும் திருக்கல்யாணமும், ஆண்டுக்கு ஒரு தடவை நடத்தும் திருக்கல்யாணமும் வேறு, வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 

Tags:    

Similar News