ஆன்மிக களஞ்சியம்
null

தட்சிண கயிலாயம்-திருவண்ணாமலை

Published On 2023-10-12 11:49 GMT   |   Update On 2023-10-17 06:42 GMT
  • அருணாசலத்தில் மலையே லிங்கமாக உள்ளது.
  • அருணாசலத்தின் கீழ்ப்புறம் ஒரு மலையில் இந்திரன் இருந்து இறைவனைத் துதிக்கிறான்.

திருவண்ணாமலையை முக்தி நகரம் என்றும், தட்சிண கயிலாயம் என்றும் போற்றுகிறார்கள்.

அது விஷ்ணுவும், பிரம்மனும் பூஜித்த தலமாகும்.

அருணாசலம், இன்று, நேற்று தோன்றியதல்ல.

ஏழுலகமும், ஆகாயமும் என்று உண்டாயினவோ அன்றே உண்டானது.

அசுர லிங்கம், தைவ லிங்கம், மானிட லிங்கம், சுயம்பு லிங்கம் என்று தலங்கள் தோறும் எத்தனையோ லிங்கங்கள் இருக்கும்.

ஆனால், அருணாசலத்தில் மலையே லிங்கமாக உள்ளது.

முன்னொரு காலத்தில் சிவனே கிரியானான்.

அருணாசலத்தின் கீழ்ப்புறம் ஒரு மலையில் தேவர் கோனாகிய இந்திரன் இருந்து இறைவனைத் துதிக்கிறான்.

தென்புறக் குன்றில் இமயன் இருந்து வணங்குவான்.

மேற்புறத்தில் வருணன் கைகூப்பிப் பணிகிறான்.

வடதிசைக் குன்றில் குபேரன் இருந்து தோத்திரம் செய்கிறான்.

மற்ற நான்கு திக்குகளில் இருக்கின்ற மலைகளில் தங்கி வாயு, அக்கினி, ஈசான்ய, நிருதிகள் வணங்குவர்.

இவற்றைச் சுற்றி உள்ள மற்ற மலைகளில் தேவர்களும், சித்தர்களும், அஷ்ட வசுக்களும் இருந்து இறைவனைப் போற்றுகின்றனர்.

வேள்வி, தியானம், யோகம் என்று எத்தனை புரிந்தாலும் அண்ணாமலையானை எண்ணாவிடில் முக்தி என்பது சாத்தியம் இல்லை.

இத்தகைய பெரும் சிறப்புகளை கொண்ட இதனை, "எத்தலத்துக்கும் மூலம் அருணாசலம்" என்று உரைத்தார் நந்தி தேவர்.

Tags:    

Similar News