ஆன்மிக களஞ்சியம்

தீராத விளையாட்டுப்பிள்ளை கண்ணன்

Published On 2024-06-12 11:31 GMT   |   Update On 2024-06-12 11:31 GMT
  • ஆழ்வார்கள், பாகவதர்கள் கண்ணனின் லீலைகளில் மனம் ஈடுபட்டு அனுபவித்துப் பாடியுள்ளார்.
  • வேதமும் இறைவனை, ‘‘ரஹோவைசா’’ என்று வர்ணிக்கிறது. ‘பகவானை விட சிறந்த ரசனை உள்ளவன் வேறில்லை’ என்பது இதன் பொருள்.

கண்ணன் செய்த லீலைகள் கணக்கில் அடங்காது.

வெண்ணெய் உண்டது, தயிரைத் திருடியது, பூதனையைக் கொன்றது, கன்று மேய்த்தது, காளிங்க நர்த்தனம் செய்தது, உரலில் கட்டுண்டது, மரங்களை முறித்தது, பிருந்தாவனத்தில் கோபியரோடு ஆடியது, கம்சனை வதம் செய்தது என்று எத்தனையோ லீலைகளை விளையாட்டாகச் செய்து முடித்தார்.

இதனை கண்ணன் பாட்டில், ''தீராத விளையாட்டுப் பிள்ளை! கண்ணன் தெருவில் இருப்போருக்கு ஓயாத தொல்லை!'' என்று பாரதியார் நகைச்சுவை உணர்வோடு பாடியிருக்கிறார்.

ஆழ்வார்கள், பாகவதர்கள் கண்ணனின் லீலைகளில் மனம் ஈடுபட்டு அனுபவித்துப் பாடியுள்ளார்.

வேதமும் இறைவனை, ''ரஹோவைசா'' என்று வர்ணிக்கிறது. 'பகவானை விட சிறந்த ரசனை உள்ளவன் வேறில்லை' என்பது இதன் பொருள்.

பணமில்லாமல் பசுதானம்

'கோவிந்தா' என்று சொன்னால் 'போனது வராது' என்று பொருள்படும். இதனால்தான் கடன் வாங்கியவன், திருப்பித்தராமல் ஏமாற்றி விட்டால், 'பணம்' கோவிந்தா தானா? என கேட்கும் வழக்கம் வந்தது.

கோவிந்தா எனும் சொல்லுக்கு வேறொரு பொருளும் உண்டு. இதை 'கோ இந்தா' என்றும் பிரிக்கலாம்.

அப்போது 'கோ' என்றால் 'பசு' 'இந்தா' என்றால் 'வாங்கிக்கொள்' என்று பொருள் வரும். கோவிந்தா... கோவிந்தா... என சொல்லச்சொல்ல பசுதானம் செய்த புண்ணியம் கிடைத்துக் கொண்டே இருக்குமாம்.

எப்போதும் கோவிந்த நாமம் சொல்லிக்கொண்டே இருங்கள். பசுக்களுடன் விளையாடி மகிழ்ந்த கிருஷ்ணனின் அருள் பூரணமாகக் கிடைக்கும்.

Tags:    

Similar News