ஆன்மிக களஞ்சியம்

வழிபாட்டு பூக்கள் பற்றிய தகவல்கள்

Published On 2024-06-20 10:51 GMT   |   Update On 2024-06-20 10:51 GMT
  • சிவலிங்கத்தின் மேல் பூவோ, வில்வமோ இல்லாமல் இருக்கக் கூடாது.
  • பூக்களை ஒரு போதும் கவிழ்த்து சார்த்தக் கூடாது.

வழிபாடுக்கு உதவும் பூக்கள் பற்றிய தகவல்கள்:

1. சந்தனமும், பூவும் இல்லாத பூஜை பயனற்றது.

2. சிவலிங்கத்தின் மேல் பூவோ, வில்வமோ இல்லாமல் இருக்கக் கூடாது.

3. பூக்களை ஒரு போதும் கவிழ்த்து சார்த்தக் கூடாது.

4.முந்தைய நாள் போட்ட புஷ்பத்தின் மீது புது புஷ்பம் சார்த்தக் கூடாது. அதைக் காலில் படாத நிலையில் களைந்த பிறகே புஷ்பம் சார்த்த வேண்டும்.

5. தாழம்பூவில் நுனியில் லட்சுமியும், மத்தியில் சரஸ்வதியும், காம்பில் மூதேவியும் உறைவதால் காம்பினை நீக்கியே பூஜையில் சமர்ப்பிக்க வேண்டும்.

6. "அர்ஜூனா! யார் எனக்கு இலை, மலர், கனி, நீர் இவற்றைப் பக்தியோடு படைக்கிறாரோ அவரது தூய மனதைக் கருதி, அவர் அளிப்பவற்றை ஏற்றுக் கொள்கிறேன்" என்று பகவத் கீதையில் பகவான் கூறுகிறார்.

7. துர்வாச முனிவரிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள திரவுபதி பரந்தாமனை அழைத்தாள். அப்போது அட்சய பாத்திரத்தில் இருந்த ஒரு சிறு இலையைத் திரவுபதி சமர்ப்பிக்க, அதை உண்டு அனைவரையும் கண்ணன் காத்தார்.

8. கஜேந்திரன் தினமும் பரந்தாமனுக்குப் புஷ்பங்களைப் பக்தியுடன் சமர்ப்பித்து வந்ததால் முதலையின் வாயில் இருந்து மீள முடிந்தது.

Tags:    

Similar News