சிம்மம் - வார பலன்கள்

வார ராசிபலன் (12.8.2024 முதல் 18.8.2024 வரை)

Published On 2024-08-12 02:16 GMT   |   Update On 2024-08-12 02:18 GMT

12.8.2024 முதல் 18.8.2024 வரை

வெற்றிகரமான வாரம். வார இறுதியில் ராசி அதிபதி சூரியன் ஆட்சி பலம் பெற்று சுக்ரன், புதனுடன் இணைகிறார். குடும்பத்தில் இழந்த சந்தோஷம் மீண்டும் துளிர்விடும். ஆன்ம பலம் பெருகி மனம் மற்றும் உடல் புனிதமடையும். குடும்ப உறவுகளுடன் ஒட்டாமல் வாழ்ந்தவர்கள் உறவுகளின் அவசியத்தை புரிந்து கொள்வார்கள். சுய தொழில் செய்பவர்களுக்கு தொட்டது துலங்கும். இரட்டிப்பு வருமானம் உண்டாகும். தொழிலில், நிலவி வந்த சிக்கல்கள் நீங்கும். குழந்தைகள் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். பூர்வீக சொத்துக்களால் விரயங்கள் ஏற்படும்.

கலைத்துறையினருக்கு மாற்றமான அனுபவங்கள் கிடைக்கும். வித்தியாசமான கற்பனைகளால் மனதில் குழப்பம் உண்டாகும். பெரியோர்களிடத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வது நல்லது. பொழுதுபோக்கு விஷயங்களால் கையிருப்புகள் குறையும். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். சுபச் செய்திகளால் சுபவிரயங்கள் ஏற்படும். நண்பர்களுக்காக பணம் கடன் வாங்கிக்  கொடுத்து அந்த கடனை நீங்களே ஏற்றுக்கொள்ள நேரலாம். உடல் நிலை மேம்படும். வரலட்சுமி வழிபாடு நன்மையை அதிகரிக்கும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News