சிம்மம் - வார பலன்கள்

இந்தவார ராசிபலன்

Published On 2024-07-29 02:08 GMT   |   Update On 2024-07-29 02:09 GMT

29.7.2024 முதல் 4.8.2024 வரை

வளமான பலன்களைப் பெறும் வாரம். ராசியில் புதன், சுக்ரன் சேர்க்கை. தனலாப அதிபதி புதன் முயற்சி ஸ்தான அதிபதி, தொழில் ஸ்தான அதிபதி சுக்ரனுடன் சேருவதால் புதிய தொழில் முயற்சிகள் வெற்றி பெறும், தொழில் ரீதியாக எடுக்கும் நடவடிக்கைகளில் பாராட்டு கிடைக்கும். கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் சிலர் பெரிய நிறுவனத்தின் கேம்பஸ் இன்டர்வியூவில் வெற்றி பெறுவார்கள். கூட்டு குடும்பத்தின் சில சிறிய விஷயங்களால் வாழ்க்கை துணையுடன் விரிசல் ஏற்படலாம். வார்த்தைகளில் நிதானத்தை கடைபிடித்தால் பெரிய பாதிப்பு ஏற்படாது.

செலவுகள் அதிகரித்தாலும் சில புத்திசாலித்தனமான செயல் பாட்டால் செலவை கட்டுப்படுத்துவீர்கள். மாணவர்கள் அதிக கவனம் செலுத்தி படிப்பது நல்லது. புதிய வாடிக்கையாளர்கள் உருவாகுவார்கள். எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். சிலருக்குத் திருமணப் பேச்சுக்கள் ஆரம்பமாகலாம். சந்ததி விருத்தி ஏற்படும். நிம்ம தியான உறக்கம் உண்டாகும். மருத்துவ செலவு குறையும். ஆடிப்பெருக்கு அன்று சிவ சக்தியை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News