துலாம் - வார பலன்கள்

வார ராசிபலன் (15.9.2024 முதல் 21.9.2024 வரை)

Published On 2024-09-16 02:43 GMT   |   Update On 2024-09-16 02:44 GMT

15.9.2024 முதல் 21.9.2024 வரை

விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் ஆட்சி. பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால் நினைப்பதொன்று நடப்பது ஒன்றாக இருந்த நிலை மாறும்.கையில் பணமும் மனதில் மகிழ்ச்சியும் பொங்கி வழியும். திறமைகளை வெளிப்படுத்தக் கூடிய நல்ல சந்தர்ப்பம் அமையும். மன சஞ்சலம் குறையும். குடும்பத்தில் மங்களகரமான சுப நிகழ்வுகள் கைகூடும். விரும்பிய இடத்திற்கு இடப்பெயர்ச்சி உண்டாகும். சிலர் தொழில் உத்தியோகத்திற்காக பூர்வீகத்தை விட்டு வெளியேறலாம். வாழ்க்கைத் துணையுடன் நிலவிய பனிப் போர்மறையும். விவாகரத்து வரை சென்ற வழக்குகள் திரும்பப் பெறப்படும்.

திருமண விசயத்தில் வேண்டாம் என்று ஒதுக்கிய வரனே சாதகமாக முடியும். வீடு, பூமி வாங்கக் கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகலாம். வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் உடனடியாக கிடைக்கும்.பணிபுரியும் பெண்களின் அறிவுத்திறன் கூடும். உயர் கல்வி வாய்ப்பு கைகூடும். இன்பச் சுற்றுலா போன்ற, இனிய பயணங்களால் இன்பத்தில் திளைப்பீர்கள். பெண்களுக்கு புகுந்த வீட்டு சீதனம் கிடைக்கும். வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு குங்கும அர்ச்சனை செய்வது நல்லது.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News