துலாம் - வார பலன்கள்

வார ராசிபலன் (1.9.2024 முதல் 7.9.2024 வரை)

Published On 2024-09-02 02:24 GMT   |   Update On 2024-09-02 02:24 GMT

1.9.2024 முதல் 7.9.2024 வரை

விபரீத ராஜ யோகமான வாரம்.ராசி அதிபதி சுக்ரன் விரய ஸ்தானத்தில் நீச்சம். ராசி அதிபதிக்கு செவ்வாய், குரு பார்வை. மனக் கவலைகள் அகலும். உங்களது ஆலோசனையை குடும்பத்தினர் ஏற்பார்கள். குடும்ப உறவுகளிடையே இணக்கமான சூழல் நிலவும். நிலுவையில் உள்ள வாடகை வருமானம் வரும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு சித்திக்கும். உயர் அதிகாரிகளால் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும். மனைவி வழி சொத்தை உயில் மாற்றம் செய்வதில் மாமனாரிடம் இருந்த எதிர்ப்புகள் அகலும்.

அசையும், அசையா சொத்து வாங்குவது, விற்பது பராமரிப்பது போன்ற காரியங்களில் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். எதிரிகளிடம் இருந்து வந்த போட்டி பொறாமைகள் மறையும். தொழிலில் சீரான சிறப்பான முன்னேற்றம் உண்டு.பேச்சை மூலதனமாக கொண்ட தொழில், கமிஷன் அடிப்படையான தொழில் புரிபவர்களுக்கும் மிக மிக சாதகமான காலம். சிலருக்கு அஷ்டம குருவால் விபரீத ராஜ யோகமான உயில் சொத்து அதிர்ஷ்ட பணம் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது. பிரிந்த தம்பதிகள் கூடி மகிழ்வார்கள். தேக சுகம் உண்டு. விநாயகரை வழிபாட்டால் சங்கடங்கள் விலகும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News