துலாம் - வார பலன்கள்
null

இந்தவார ராசிபலன்

Published On 2024-07-29 02:11 GMT   |   Update On 2024-07-29 02:17 GMT

29.7.2024 முதல் 4.8.2024 வரை

பாக்கிய பலன் அதிகரிக்கும் வாரம் ராசி அதிபதி சுக்ரன் 9,12-ம் அதிபதி புதனுடன் லாப ஸ்தானத்தில் சேர்க்கை. பாக்கிய பலன்கள் அதிகரித்து வாழ்க்கைத் தரம் உயரும். மிக அற்புதமான கிரக அமைப்பு என்பதால் பெற்றோர் வழியில் சில உதவி கள் கிடைக்கும். வீட்டில் அமைதியும், நிம்மதியும் நிலவும். வியாபாரப் பாக்கிகள் அனைத்தும் வசூலாகும். வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால் தனலாபம் அதிகரிக்கும்.அரசு ஊழியர்களுக்கு அதிகாரம் மிக்க உயர் பதவிகள் கிடைக்கும். சிலருக்குக் கவுரவப் பட்டங்கள் கிடைக்கும். தாய் மாமனால் நன்மை ஏற்படும். ஆடி மாதம் என்பதால் சாலையோர பொருள்களின் விற்பனை சூடுபிடிக்கும்.

நண்பர்கள் மற்றும் உறவு களின் வருகையால் உள்ளம் மகிழும்.உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுடன் சில விஷயத்தை விடாப்பிடியாகப் பிடித்துக் கொள்வது உங்களுக்கு சிக்கலைத் தரலாம். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் கூடும். 29.7.2024 அன்று மாலை 4.45 முதல் 31.7.2024 அன்று இரவு 10.15 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சில நேரங்களில் பலவீனமாகவும் சோர்வாகவும் உணர்வீர்கள். ஆடி வெள்ளிக்கிழமை அஷ்ட லட்சுமிகளை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News