துலாம் - வார பலன்கள்

இந்தவார ராசிபலன்

Published On 2024-07-08 02:23 GMT   |   Update On 2024-07-08 02:24 GMT

8.7.2024 முதல் 14.7.2024 வரை

உயர்வானதை அடையும் வாரம். 9-ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் நிற்பதால் பாக்கிய ஸ்தானம் பலம் பெறுகிறது. நினைத்தது நிறைவேறும். உங்கள் குடும்பத்தின் மேல் இருந்த கண் திருஷ்டி அகன்று அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம் நிலவும். தொழில் மூலம் நல்ல பொருளாதார வளர்ச்சி ஏற்படும். சமுதாய அந்தஸ்து, வெற்றி, புகழ் செல்வாக்கு பெறுவீர்கள். வீட்டிலும், தொழில் இடத்திலும் லட்சுமி கடாட்சம் உண்டாகும். வாடிக்கையாளர்கள் தொழிலுக்கு ஒத்துழைத்து பணம் கொடுங்கல் வாங்கல் சுமூகமாக நடைபெறும்.

உத்தியோகஸ்தர்கள் திறமையால் அலுவலகத்தில் நற்பெயர் பெறுவார்கள். வயோதிகர்களுக்கு ஆரோக்கியக் குறைபாடு சீராகும். மூத்த மருமகன் சொத்து பிரிப்பதில் தன் ஆதிக்கத்தை செலுத்துவார்.சிலர் வேலைக்காக வெளிநாடு செல்லலாம். நீதி மன்ற வழக்குகளில் இருந்து எதிர்பாராத ஒரு இனிய செய்தி கிட்டும். ஆன்மீக தலங்களுக்கு சென்று மன மகிழ்சியை அதிகரிப்பீர்கள். தந்தைக்கு ஊதிய உயர்வு பதவி உயர்வு கிடைக்கும். அரசியல் ஆதாயம் உண்டு. வாராகி வழிபாடு முன்னேற்றத்தை வழங்கும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News