மழைநீர் தேங்கிய பள்ளத்தில் குழந்தைகளுடன் தவறி விழுந்த பெண்கள்- வீடியோ காட்சிகள்
- பலரும் நெடுஞ்சாலைத்துறைக்கும், உள்ளூர் அரசு நிர்வாகத்திற்கும் கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர்.
- ஒரு கடைக்கு 2 கைக்குழந்தைகளுடன் பெண்கள் குடை பிடித்த படி வந்தனர்.
மதுரை:
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மிதமான முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்மாவட்டங்களில் மதுரை, சிவகங்கை, விருதுநகரில் மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
ஏற்கனவே சாலைகள் மோசமாக உள்ள நிலையில் திடீர் மலை காரணமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் சாலைகள் மாறி உள்ளது. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்வோர் மழைநீர் தேங்கியிருக்கும் பள்ளங்களில் விழுந்து காயமடைவது நிகழ்ந்து வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று பிற்பகல் முதல் மிதமாகன மலை பெய்தது. சாத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியது. நேற்று சாத்தூரில் உள்ள ஒரு கடைக்கு 2 கைக்குழந்தைகளுடன் பெண்கள் குடை பிடித்த படி வந்தனர்.
கடை அருகே நெடுஞ்சா லைத்துறையால் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் மழைநீர் முழுவதுமாக தேங்கியிருந்தது. இதை அறியாமல் கைக்குழந்தைகளுடன் வந்த 2 பெண்களும் எதிர்பாராத விதமாக பள்ளத்தில் விழுந்து தண்ணீரில் மூழ்கினர்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கடைக்காரர்கள் விரைந்து செயல்பட்டு 2 கைக்குழந்தைகள், பெண்களை மீட்டனர். அதிர்ஷ்டவசமாக காயம் ஏற்படவில்லை.
பெண்கள் 2 குழந்தையுடன் பள்ளத்தில் விழும் காட்சி அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதற்கு பலரும் நெடுஞ்சாலைத்துறைக்கும், உள்ளூர் அரசு நிர்வாகத்திற்கும் கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர்.