வாகனங்கள் விலையை மாற்றும் ஹீரோ மோட்டோகார்ப்
- ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது இருசக்கர வாகனங்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது.
- இது தவிர அப்டேட் செய்யப்பட்ட மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருக்கிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது இருசக்கர வாகனங்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. இது தவிர அப்டேட் செய்யப்பட்ட மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருக்கிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. விலை உயர்வு ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. புது அறிவிப்பின் படி இருசக்கர வாகனங்கள் விலை ரூ. 3 ஆயிரம் வரை அதிகரிக்க இருக்கிறது. விலை உயர்வு ஒவ்வொரு மாடல் மற்றும் சந்தைக்கு ஏற்ப வேறுபடும்.
தொடர்ச்சியாக செலவீனங்கள் அதிகரித்து வருவது மற்றும் உதிரிபாகங்கள் விலை உயர்வு காரணமாக வாகனங்களின் விலை உயர்த்தப்படுவதாக ஹீரோ மோட்டோகார்ப் அறிவித்து இருக்கிறது. விலை உயர்வு தவிர வாகனங்களில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்திய இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப் எக்ஸ்-பல்ஸ் 200 4V மாடலை யூரோ 5 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்ய இருக்கிறது. இந்த மாடலில் மேம்பட்ட ஹெட்லைட் டிசைன், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், ப்ரோஜெக்டர் எல்.இ.டி. ஹெட்லைட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. இதே போன்ற அப்டேட்கள் ஹீரோ எக்ஸ் பல்ஸ் 200 4V மாடலின் இந்திய வேரியண்டிலும் வழங்கப்படும் என தெரிகிறது.