இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் லீசிங் வியாபாரத்தை துவங்கிய யமஹா
- யமஹா நிறுவனம் இந்திய சந்தையில் புது வியாபாரத்தை துவங்கி இருக்கிறது.
- சிப் எனும் டெலிவரி நிறுவனத்தில் யமஹா முதலீடு செய்கிறது.
யமஹா நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை லீசுக்கு விடும் புது வியாபாரத்தை இந்தியாவில் துவங்கி உள்ளது. யமஹா நிறுவனத்தின் துணை பிராண்டு மோட்டோ பிஸ்னஸ் சர்வீஸ் இந்தியா மூலம் புதிய லீசிங் வியாபாரத்தை நடத்த யமஹா முடிவு செய்துள்ளது.
இந்த வியாபாரத்திற்காக யமஹா நிறுவனம் சிப் எலெக்ட்ரிக் எனும் டெலிவரி சர்வீஸ் நிறுவனத்தில் முதலீடு செய்கிறது. லீசிங் வியாபாரத்தில் மோட்டோ பிஸ்னஸ் சர்வீஸ் இந்தியா நிறுவனம் முதற்கட்டமாக 250 ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை சிப் நிறுவனத்திற்கு வழங்கும். சிப் நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தனது வியாபாரத்தில் பயன்படுத்த இருக்கிறது.
தற்போது நாடு முழுக்க சுமார் 5 ஆயிரம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை சிப் வைத்து இருக்கிறது. இந்திய சந்தையில் தனது வியாபாரத்தை நீட்டிக்க சிப் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக 2024 வாக்கில் 1.5 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை வைத்திருக்க சிப் நிறுவனம் இலக்கு நிர்ணயம் செய்து இருக்கிறது.