கார்

ஆடி கார் வாங்குறீங்களா? அப்போ உடனே புக் பண்ணிடுங்க...!

Published On 2022-08-23 11:11 GMT   |   Update On 2022-08-23 11:11 GMT
  • ஆடி இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது.
  • இந்த முறை கார்களின் விலை 2.4 சதவீதம் வரை உயர்த்தப்பட இருக்கிறது.

ஆடி இந்தியா நிறுவனத்தின் கார் மாடல்கள் விலை 2.4 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது. விலை உயர்வு ஆடி இந்தியாவின் அனைத்து மாடல் மற்றும் வேரியண்ட்களுக்கும் பொருந்தும். இந்த விலை உயர்வு செப்டம்பர் 20, 2022 முதல் அமலுக்கு வருகிறது.

ஆட்டோமொபைல் சந்தையில் தொடர் செலவீனங்கள் அதிகரிப்பு மற்றும் வினியோக சிக்கல் போன்ற காரணங்களால் விலை உயர்வு அறிவிக்கப்படுவதாக ஆடி இந்தியா தெரிவித்து இருக்கிறது.


தற்போது ஆடி இந்தியா நிறுவனம் ஆடி A4, A6, A8 L, Q5, Q7, Q8, S5 ஸ்போர்ட்பேக், RS 5 ஸ்போர்ட்பேக் மற்றும் RS Q8 போன்ற கார்களை பெட்ரோல் பிரிவில் விற்பனை செய்து வருகிறது. இ-டிரான் பிராண்டின் கீழ் ஆடி இந்தியா நிறுவனம் இ-டிரான் 50, இ-டிரான் 55, இ-டிரான் ஸ்போர்ட்பேக் 55, இ-டிரான் GT மற்றும் RS இ-டிரான் GT போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

இது தவிர ஆடி இந்தியா நிறுவனம் சமீபத்தில் தான் முற்றிலும் புதிய Q5 மாடலுக்கான முன்பதிவை இந்தியாவில் துவங்கியது. இந்த காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 2 லட்சம் ஆகும். இத்துடன் இந்த மாடலின் வேரியண்ட் வாரியான அம்சங்கள் பற்றியும் ஆடி இந்தியா அறிவித்து விட்டது. இந்த காரின் விலை விவரங்கள் அடுத்த வாரம் அறிவிக்கப்பட உள்ளது.

Tags:    

Similar News