சீனா கார்களை இத்தாலி 'மேட்' கார் என விளம்பரப்படுத்திய கார் கம்பெனிக்கு ரூ. 53 கோடி அபராதம்
- எங்களது நிறுவனத்தின் அனைத்து கார்களும் இத்தாலியில் தயாரிக்கப்பட்டது என்று நாங்கள் விளம்பரப்படுத்தவில்லை.
- இந்த அபராதத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்ய இருக்கிறோம்.
சீனாவில் தயாரிக்கப்படும் கார்களை இத்தாலியில் தயாரிக்கப்பட்டது என பொய்யாக விளம்பரப்படுத்தியதால் டி.ஆர். ஆட்டோமொபைல்ஸ் கார் நிறுவனத்திற்கு இத்தாலி அரசு 53 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
டி.ஆர் ஆட்டோமொபைல்ஸ் கம்பெனி சீன கார் தயாரிப்பாளர்களான செரி, பி.ஏ.ஐ.சி. மற்றும் ஜே.ஏ.சி. தயாரித்த உதிரிபாகங்களை அசெம்பிள் செய்து கார்களை தயாரிக்கிறது.
ஆனால், டி.ஆர் ஆட்டோமொபைல்ஸ் தனது நிறுவனத்தின் கார்கள் இத்தாலியில் தயாரிக்கப்பட்டதாக விளம்பரப்படுத்தி விற்பனை செய்கிறது. அவற்றின் அசெம்ப்ளி மற்றும் இறுதிப் பணிகள் மட்டுமே இத்தாலியில் மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், "எங்களது நிறுவனத்தின் அனைத்து கார்களும் இத்தாலியில் தயாரிக்கப்பட்டது என்று நாங்கள் விளம்பரப்படுத்தவில்லை. ஆதலால் இந்த அபராதத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்ய இருக்கிறோம்" என்று டி.ஆர் ஆட்டோமொபைல்ஸ் தெரிவித்துள்ளது.