கார்களுக்கு ரூ. 73 ஆயிரம் வரை தள்ளுபடி.. மஹிந்திரா அசத்தல்!
- மஹிந்திரா மராசோ மாடலின் பேஸ் M2 வேரியண்ட்-க்கு ரூ. 58 ஆயிரம் வரையிலான பலன்கள் அறிவிப்பு.
- மஹிந்திரா XUV300 மாடலின் T-GDI வேரியண்ட்களுக்கு ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
மஹிந்திரா நிறுவன டீலர்ஷிப்கள் சார்பில் மஹிந்திரா கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகின்றன. தள்ளுபடி மற்றும் இதர சலுகைகள் தார் 4x4, பொலிரோ, பொலிரோ நியோ, மராசோ மற்றும் XUV300 மாடல்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளன.
இந்த கார் மாடல்களுக்கு எவ்வளவு சலுகைகள் வழங்கப்படுகின்றன என்ற விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். இந்த பலன்கள் கேஷ் தள்ளுபடி, இலவச அக்சஸரீக்கள் வடிவில் வழங்கப்படுகின்றன. இந்த மாதம் மஹிந்திரா தார் RWD, XUV700, ஸ்கார்பியோ N, ஸ்கார்பியோ கிளாசிக், XUV400 மற்றும் பொலிரோ, XUV300 கார்களின் தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களுக்கு மட்டும் வழங்கப்படவில்லை.
மஹிந்திரா மராசோ மாடலின் பேஸ் M2 வேரியண்ட் ரூ. 58 ஆயிரமும், மிட் ஸ்பெக் M4 பிளஸ் வேரியண்டிற்கு ரூ. 36 ஆயிரமும், டாப் எண்ட் M6 பிளஸ் வேரியண்டிற்கு ரூ. 73 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. மஹிந்திரா மராசோ மாடலில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 123 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
மஹிந்திரா பொலிரோ மாடலின் பி4 வேரியண்டிற்கு ரூ. 37 ஆயிரம் தள்ளுபடி, பி6 மற்றும் பி6 ஆப்ஷனல் ட்ரிம்களுக்கு முறையே ரூ. 25 ஆயிரம், ரூ. 60 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. பொலிரோ மாடலில் 75 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
மஹிந்திரா XUV300 மாடலின் T-GDI வேரியண்ட்களுக்கு ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி, மற்ற வேரியண்ட்களுக்கு ரூ. 5 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 52 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் டீசல் வேரியண்ட்களுக்கு ரூ. 20 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 55 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.
மஹிந்திரா பொலிரோ நியோ மாடலுக்கு ரூ. 50 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இந்த மாடலில் 100 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்ட 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. மஹிந்திரா தார் மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 30 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன.