கார்

டெஸ்டிங்கில் சிக்கிய சிவப்பு நிற நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் - வெளியீடு எப்போ தெரியுமா?

Published On 2023-08-31 11:03 GMT   |   Update On 2023-08-31 11:03 GMT
  • நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சிவப்பு நிற ஆப்ஷனில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.
  • நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் என்ஜின்கள் வழங்கப்படலாம்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் டெஸ்டிங்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் லீக் ஆகி உள்ளது. செப்டம்பர் மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சிவப்பு நிற ஆப்ஷனில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

காரின் வெளிப்புறம் முற்றிலும் புதிய பம்ப்பர்கள் முன்புறம் மற்றும் பின்புறத்தில் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஸ்ப்லிட் ரக ஹெட்லேம்ப்கள், மெல்லிய டி.ஆர்.எல்.-கள், புதிய அலாய் வீல்கள், நீட்டிக்கப்பட்ட ரூஃப் ஸ்பாயிலர், ஷார்க் ஃபின் ஆண்டெனா, ரிவைஸ்டு எல்.இ.டி. டெயில் லைட்கள், கனெக்டிங் லைட் பார் உள்ளது.

 

முந்தைய ஸ்பை படங்களில் நெக்சான் மாடல் இண்டிகோ நிறம் கொண்டிருப்பது தெரியவந்து இருந்தது. இந்த முறை இந்த எஸ்.யு.வி. மாடல் பிரைட் ரெட் நிறம் கொண்டிருக்கிறது. இது தற்போதைய வெர்ஷனில் உள்ள ஃபிளேம் ரெட் வேரியண்ட் ஆகவே இருக்கும் என்று தெரிகிறது.

காரின் உள்புறம் அளவில் பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், புதிய யு.ஐ., டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், டச் கண்ட்ரோல் வசதி கொண்ட HVAC கண்ட்ரோல்கள், டுவின்-ஸ்போக் ஸ்டீரிங் வீல் உள்ளது.

நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT யூனிட் வழங்கப்படுகிறது. இந்த காரின் பெட்ரோல் வேரியண்டில் DCT கியர்பாக்ஸ் வழங்கப்படும் என்றும் தெரிகிறது.

இந்திய சந்தையில் நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் கியா சொனெட், மாருதி சுசுகி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா XUV300 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

Photo Source: Upbeat Umang via Carwale

Tags:    

Similar News