இது புதுசு

விலை ரூ. 237 கோடி தான் - 1000 கி.மீ. ரேன்ஜ் கொண்ட எலெக்ட்ரிக் ஹைப்பர்கார்!

Published On 2022-07-06 07:49 GMT   |   Update On 2022-07-06 07:49 GMT
  • டெக்சாஸ்-ஐ சேர்ந்த ஹெனசி நிறுவனம் புதிதாக எலெக்ட்ரிக் ஹைப்பர்கார் மாடலை உருவாக்கி வருகிறது.
  • இந்த காரின் விலை விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் டெக்சாஸ்-ஐ சேர்ந்த ஹெனசி நிறுவனம் எலெக்ட்ரிக் ஹைப்பர்கார் மாடலை உருவாக்கி வருவதாக அறிவித்து இருந்தது. புதிய எலெக்ட்ரிக் ஹைப்பர்கார் மாடல் டீப்-ஸ்பேஸ் என அழைக்கப்படுகிறது. டீர்-ஸ்பேஸ் மாடலில் மொத்தம் ஆறு வீல்கள் வழங்கப்பட இருக்கிறது. இந்த ஹைப்பர்காரின் உற்பத்தி 2026 வாக்கில் துவங்க இருக்கிறது. இதன் விலை ரூ. 237 கோடியே 5 லடச்த்து 26 ஆயிரத்து 917 வரை நிர்ணயம் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தற்போதைய தகவல்களில் புதிய ஹெனசி டீப்-ஸ்பேஸ் மாடல் முழு சார்ஜ் செய்தால் 1000 கி.மீ. ரேன்ஜ் கிடைக்கும் என ஹெனசி நிறுவனத்தின் சி.இ.ஒ. ஜான் ஹெனசி தெரிவித்து இருக்கிறார். இந்த காரில் வழங்கப்பட இருக்கும் பெரிய பேட்டரி காரணமாக இந்த ரேன்ஜ் சாத்தியம் தான் என அவர் மேலும் தெரிவித்தார். எனினும், இவ்வாறு செய்யும் போது காரின் எடை அதிகரிக்கும் வாய்ப்புகளும் உண்டு.


முன்னதாக ஹெனசி வெளியிட்ட தகவல்களில் இந்த ஹைப்பர்கார் மணிக்கு 322 கி.மீ. வேகத்தில் சீறிப் பாயும் திறன் கொண்டு இருக்கும் என தெரிவித்து இருந்தார். இதில் உள்ள ஆறு எலெக்ட்ரிக் மோட்டார்கள் 2400 ஹெச்.பி. வரையிலான திறன் வழங்கும் திறன் கொண்டு இருக்கிறது.

இந்த ஹைப்பர்கார் மாடல் 'பிராஜக்ட் டீப்-ஸ்பேஸ்' திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு வருகிறது. இது அதிவேகமாக செல்வதோடு, அதீத செயல்திறன் கொண்டிருக்கும். ஹைப்பர்கார் மட்டுமின்றி இதன் இண்டீரியர் அதிக ஆடம்பர வசதிகளை கொண்டிருக்க வேண்டும் என ஹெனசி முடிவு செய்துள்ளது. தற்போதைய ஆடம்பர கார்களுக்கு சவால் விடும் வகையில், இந்த மாடலின் அம்சங்கள் இடம்பெற்று இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

உலகம் முழுக்க ஹெனசி டீப்-ஸ்பேஸ் மாடல் மொத்தத்தில் 105 யூனிட்களே உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இதன் ப்ரோடோடைப் மாடல் 2025 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டு, உற்பத்தி வெர்ஷன் 2026 வாக்கில் உருவாக்கப்படலாம். இந்த காரின் முதல் வேரியண்ட்-ஐ வாங்க ஏற்கனவே ஒரு வாடிக்கையாளர் முன்பதிவு செய்து இருக்கிறார்.

Tags:    

Similar News