இது புதுசு

இந்தியாவில் வால்வோவின் முதல் எலெக்ட்ரிக் கார் - எப்போ வெளியீடு தெரியுமா?

Published On 2022-07-05 06:18 GMT   |   Update On 2022-07-05 06:18 GMT
  • வால்வோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய இருக்கிறது.
  • இந்த மாடலின் வெளியீடு மெட்டாவெர்ஸ் வெர்ஷனாக நடைபெற இருக்கிறது.

இந்திய சந்தையில் வால்வோ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் XC40 ரிசார்ஜ் ஒரு ஆண்டுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விற்பனை கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே துவங்க இருந்தது. எனினும், வால்வோ நிறுவனம் தனது காரை இறக்குமதி செய்ய முடிவு எடுத்த காரணத்தால் இதன் விற்பனை தாமதமாகி போனது.

தற்போது வால்வோ நிறுவனம் தனது XC40 ரிசார்ஜ் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர முடிவு செய்து இருக்கிறது. மேலும் இந்த மாடலின் வெளியீடு ஜூலை 26 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. மேலும் இந்த மாடலின் வெளியீடு மெட்டாவெர்ஸ் வெர்ஷனாக நடைபெற இருக்கிறது. இதனை வால்வோ நிறுவனம் வால்வோவெர்ஸ் என அழைக்கிறது.


வால்வோ XC40 ரிசார்ஜ் மாடலில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் டிரைவ் டிரெயின் 405 ஹெச்.பி. பவர், 660 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 100 கி.மீ. வேகத்தை 4.9 நொடிகளில் எட்டி விடும். இந்த எலெக்ட்ரிக் காரில் 79 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 400 கிமீ ரேன்ஜ் வழங்குகிறது.

கடந்த ஆண்டு வால்வோ நிறுவனம் வால்வோ XC60, வால்வோ S90 மற்றும் வால்வோ XC90 பெட்ரோல் மற்றும் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்துடன் அறிமுகம் செய்தது. அனைத்து பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களுக்கு மாற்றாக முழு எலெக்ட்ரிக் மற்றும் ஹைப்ரிட் மாடல்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

Tags:    

Similar News