கிரிக்கெட் (Cricket)
null

அரையிறுதி போட்டி: 56 ரன்களில் ஆப்கானிஸ்தானை சுருட்டிய தென் ஆப்பிரிக்கா

Published On 2024-06-27 01:36 GMT   |   Update On 2024-06-27 01:40 GMT
  • குர்பாஸ், முகமது நபி, நூர் அகமது ஆகியோர் டக் அவுட் முறையில் வெளியேறினர்.
  • தென் ஆப்பிரிக்கா தரப்பில் யான்சன், ஷம்ஸி 3 விக்கெட்டும் ரபாடா 2 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் முதலாவது அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதனபடி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை சாமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.

அந்த வகையில் முதல் ஓவரிலே குர்பாஸ் 0 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நைப் 9 ரன்னிலும் இப்ராஹிம் சத்ரான் 2, முகமது நபி 0, நங்கெயாலியா கரோட் 2, ஓமர்சாய் 10 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 28 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது.

இந்த நிலையில் கேப்டன் ரஷித் கான் மற்றும் கரீம் ஜனத் ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். நிதானமாக விளையாடிய கரீம் 8 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த நூர் அகமது 2 பந்தில் 0 ரன்னில் வெளியேறினார். 2 பவுண்டரிகளை விளாசிய ரஷித் கான் 8 ரன்னில் நோர்க்யா பந்து வீச்சில் ஸ்டெம்புகள் சிதற ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து நவீன் 2 ரன்களில் வெளியேறினார்.

இதனால் ஆப்கானிஸ்தான் அணி 11.5 ஓவரில் 56 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் யான்சன், ஷம்ஸி 3 விக்கெட்டும் ரபாடா 2 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.

Tags:    

Similar News