கிரிக்கெட் (Cricket)

விசா பிரச்சனை காரணமாக முகமது அமிர் அயர்லாந்து செல்வதில் தாமதம்

Published On 2024-05-06 10:20 GMT   |   Update On 2024-05-06 10:20 GMT
  • முகமது அமிர் 2010-ம் ஆண்டு மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக சிறைத்தண்டனை பெற்றார்.
  • இதனால் அயர்லாந்து அவரது விசாவை தடை செய்தது.

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர். இவர் ஏற்கனவே அணியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார். தற்போது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரவிருக்கும் நிலையில், பாகிஸ்தான் அணிக்கு விளையாட விருப்பம் தெரிவித்திருந்தார். அவரது விருப்பத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொண்டது. இதனால் பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்துள்ளார்.

பாகிஸ்தான் அணி அயர்லாந்தில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அயர்லாந்து தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் இன்று காலை அயர்லாந்து புறப்பட்டனர்.

ஆனால் முகமது அமிர் மட்டும் புறப்படவில்லை. முகமது அமிர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு சிறைக்கு சென்றார். அப்போது அயரலாந்து அவரது விசாவுக்கு தடைவிதித்திருந்தது. தற்போதும் அது நடைமுறையில் இருக்கிறது. இதனால் உடனடியாக விசா அவருக்கு கிடைக்கவில்லை. இன்று அல்லது நாளைக்குள் விசா கிடைத்துவிடும். அதன்பின் அணியுடன் முகமது அமிர் இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018-ம் ஆண்டும் இதுபோன்ற பிரச்சனை முகமது அமிருக்கு ஏற்பட்டது. பின்னர் விசா வழக்கப்பட்டது. பாகிஸ்தான்- அயர்லாந்து இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி மே 10-ந்தேதி நடக்கிறது.

2010-ம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக முகமது அமிர் மீது குற்றம்சாட்டப்பட்டது. பின்னர் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News