கிரிக்கெட் (Cricket)

இந்தியாவுக்கு பிறகு 1000-வது ஒருநாள் போட்டி விளையாடிய ஆஸ்திரேலியா

Published On 2024-02-06 07:15 GMT   |   Update On 2024-02-06 07:15 GMT
  • இந்திய அணி 1055 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளது.
  • பாகிஸ்தான் 970 ஒருநாள் போட்டியில் விளையாடி 3-வது இடத்தில் உள்ளது.

கான்பெரா:

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இன்று 1000-வது ஒருநாள் போட்டியில் விளையாடி சாதனை படைத்தது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இன்று நடந்த 3-வது ஒருநாள் ஆட்டம் அந்த அணியின் 1000-வது ஒருநாள் போட்டியாகும். ஆயிரம் போட்டியில் விளையாடிய 2-வது நாடு ஆஸ்திரேலியாவாகும். இந்திய அணி 1055 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளது. பாகிஸ்தான் 970 ஒருநாள் போட்டியில் விளையாடி 3-வது இடத்தில் உள்ளது.

கான்பெராவில் நடந்த 3-வது ஒருநாள் போட்டியில் முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 24.1 ஓவரில் 86 ரன்னில் சுருண்டது. 87 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா ஆடியது.

Tags:    

Similar News