கிரிக்கெட் (Cricket)

ஆண்டர்சனுக்கு வாழ்த்து தெரிவித்த பதிவை டெலிட் செய்த பாபர் அசாம் - கலாய்த்த நெட்டிசன்கள்

Published On 2024-07-13 07:42 GMT   |   Update On 2024-07-13 07:42 GMT
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஆண்டர்சன் 3-வது இடத்தில் உள்ளார்.
  • டெஸ்ட் போட்டியில் மட்டும் 188 போட்டிகள் விளையாடி 704 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மட்டும் 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடி ஆண்டர்சன் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த போட்டியுடன் இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். 22 ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்காக விளையாடிய அவர் மொத்தமாக 991 விக்கெட்டும், டெஸ்ட் போட்டியில் மட்டும் 188 போட்டிகள் விளையாடி 704 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 32 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஆண்டர்சன் 3-வது இடத்தில் உள்ளார். முதல் மற்றும் 2-வது இடங்கள் முறையே முரளிதரன் (800 விக்கெட்டுகள்), வார்னே (708) உள்ளனர்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஆண்டர்சனுக்கு உலகம் முழுவதும் இருந்து முன்னாள் வீரர்கள் இந்நாள் வீரர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அவ்வகையில் பாகிஸ்தானின் அணியின் கேப்டனான பாபர் அசாமும் தனது எக்ஸ் பக்கத்தில் ஆண்டர்சனுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அந்த வாழ்த்து பதிவில், "உங்களது கட்டர்களை எதிர்கொள்வதே பெரும் பாக்கியம் தான். ஒரு அழகான விளையாட்டு ஒரு சிறந்த வீரரை இழக்கிறது. இவ்விளையாட்டிற்காக நீங்கள் செய்த தியாகம் அசாத்தியமானது.. உங்களின் மீது மிகுந்த மரியாதை உள்ளது. கோட்" என்று பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவினை அடுத்து, தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பாபர் அசாமுக்கு 2 முறை மட்டும் தான் ஆண்டர்சன் கட்டர்கள் வீசியுள்ளார் என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு பாபர் அசாமை நெட்டிசன்கள் கிண்டலடிக்க ஆரம்பித்தனர்.

நெட்டிசன்களின் விமர்சனத்தை தொடர்ந்து உடனடியாக அந்த பதிவை பாபர் அசாம் டெலிட் செய்துள்ளார். பின்னர் புதிய பதிவை பாபர் அசாம் இட்டுள்ளார். அதில், பழைய பதிவில் இருந்து கட்டர் என்ற வார்த்தையை நீக்கி விட்டு ஸ்விங் என்ற வார்த்தையை மட்டும் சேர்த்து பாபர் அசாம் பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News