வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆப்கானிஸ்தான் 45/2
- ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 13 ரன்னில் ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறினார்.
- இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு 617 ரன்கள் தேவையாக உள்ளது.
வங்காளதேசம்- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் அணி முதல் நாள் முடிவில் 79 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 362 ரன்கள் குவித்தது.
2-ம் நாளில் தொடர்ந்து ஆடிய வங்காளதேசம் அணி முதல் இன்னிங்சில் 382 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 146 ரன்னில் சுருண்டது. இதனால் 236 ரன்கள் முன்னிலையுடம் களமிறங்கிய வங்காளதேசம் அணி 2-வது இன்னிங்சில் ஷான்டோ மற்றும் மோமினுல் சதத்தால் 425 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
இதனால் ஆப்கானிஸ்தானுக்கு 662 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய ஆப்கானிஸ்தான் அணி முதல் ஓவரின் முதல் பந்திலேயே முதல் விக்கெட்டை இழந்தது. அடுத்த ஓவரில் 2-வது விக்கெட்டை இழந்தது. அடுத்து வந்த ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 13 ரன்னில் ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறினார்.
இதனையடுத்து ரஹ்மத் ஷா - நசீர் ஜமால் ஜோடி நிதானமாக விளையாடியது. இதனால் 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 45 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு 617 ரன்கள் தேவையாக உள்ளது. கைவசம் 8 விக்கெட்டுகள் கைவசம் உள்ளது.