கிரிக்கெட் (Cricket)

இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ அறிவித்த விருதுகள்

Published On 2024-01-24 02:02 GMT   |   Update On 2024-01-24 02:02 GMT
  • ஆண்டு தோறும் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருது வழங்கி பிசிசிஐ கௌரவித்து வருகின்றது.
  • கொரோனா காலகட்டத்தினால் வீரர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி சில ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்தது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை போட்டிகளுக்குத் தயார் செய்வது மட்டும் இல்லாமல் வீரர்களை ஊக்குவிக்கும் செயல்களிலும் ஈடுப்பட்டு வருகின்றது. இதில் ஆண்டு தோறும் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருது வழங்கி கௌரவித்து வருகின்றது. கொரோனா காலகட்டத்தினால் வீரர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி சில ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்தது. தற்போது அவை அனைத்திற்கும் சேர்த்து மொத்தமாக மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிசிசிஐ வழங்கியுள்ளது.

மகளிர் கிரிக்கெட்டில் சிறந்த சர்வதேச அறிமுக வீராங்கனைக்கான விருது:

1. பிரியா புனியா : 2019 -20

2. சபாலி வர்மா : 2020 - 21

3. சபினெனி மேக்னா : 2021 - 21

4. தேவிகா வைத்யா : 2022 23

மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் குறிப்பிட்ட வருடத்தில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீராங்கனைக்கான விருது:

1. பூனம் யாதவ் : 2019 -20

2. ஜூலன் கோஸ்வாமி : 2020 -21

3. ராஜேஸ்வரி கைக்வாட் : 2021 - 22

4. தேவிகா வைத்யா : 2022 -23

மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு காலண்டரில் அதிக ரன்கள் அடித்த வீராங்கனைக்கான விருது:

1. பூனம் ரௌட் : 2019 - 20

2. மித்தாலி ராஜ் : 2020 - 21

3. ஹர்மன்ப்ரீத் கௌர் : 2021 - 22

4. ஜெமிமா ரோட்ரிக்ஸ் : 2022 - 23

மகளிர் கிரிக்கெட்டில் குறிப்பிட்ட வருடத்தின் சிறந்த வீராங்கனை:

1. தீப்தி சர்மா : 2019 - 20

2. தீப்தி சர்மா : 2020 - 21

3. ஸ்மிருதி மந்தனா : 2021 - 22

4. ஸ்மிருதி மந்தனா : 2022 - 23

சிறந்த சர்வதேச அறிமுக வீரருக்கான விருது:

1. மயங்க அகர்வால் : 2019 - 20

2. அச்சர் படேல் : 2020 - 21

3. ஸ்ரேயாஸ் ஐயர் : 2021 - 22

4. யசஸ்வி ஜெய்ஸ்வால் : 2022 - 23

சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான பாலி உம்ரிகர் விருது:

1. முகமது ஷமி : 2019 - 20

2. ரவிச்சந்திரன் அஸ்வின் : 2020 - 21

3. ஜஸ்பிரித் பும்ரா : 2021 - 22

4. சுப்மன் கில் : 2022 - 2023

திலிப் சர்தேசாய் விருது:

1. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்கள் எடுத்த வீரர் : ரவிச்சந்திரன் அஸ்வின், 2022 - 23 (இந்தியா - வெஸ்ட் இண்டீஸ்)

2. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் : யசஸ்வி ஜெய்ஸ்வால், 2022 - 23 (இந்தியா - வெஸ்ட் இண்டீஸ்)

சிகே நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது:

1. ரவி சாஸ்திரி மற்றும் பரூக் என்ஜினீயர்

இந்த விழாவில் பிசிசிஐ தலைவர் மற்றும் முன்னாள் வீரர் ரோஜர் பின்னி செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக இருந்து விருதுகளை வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு வழங்கினார்கள். அந்த நிகழ்ச்சியை பிரபல தொகுப்பாளர் ஹர்ஷா போக்லே தொகுத்து வழங்கிய நிலையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா, முகமது சிராஜ் போன்ற அனைத்து வீரர்களும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோரும் பங்கேற்றார்கள். 

Tags:    

Similar News