பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம் கேன்டீன் உணவால் 'ஃபுட் பாய்சன்' - இளைஞர் புகார்
- ஆர்சிபி, சிஎஸ்கே இடையிலான ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட 90% வாய்ப்பு
- மழையால் போட்டி ரத்தானால் சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.
இந்தப் போட்டியில் வென்றாலோ அல்லது மழையால் ஆட்டம் கைவிடப்பட்டாலோ சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும்.
ஆனால், பெங்களூரு அணி சென்னை அணியை விட குறைவான ரன்ரேட் வைத்துள்ளது. எனவே இன்று நடக்கும் போட்டியில் ஆர்.சி.பி. அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றாலோ அல்லது 18.1 ஓவரில் இலக்கை எட்டி வெற்றியைப் பெற்றாலோ 4-வது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
இதற்கிடையே, பெங்களூருவில் நடைபெறவுள்ள ஆர்சிபி, சிஎஸ்கே இடையிலான ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட 90 சதவீத வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆட்டத்தின் ஓவர்களும் குறைக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
இந்நிலையில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் உள்ள கேண்டீனில் வழங்கப்பட்ட உணவினால் ஃபுட் பாய்சன் ஏற்பட்டதாக 23 வயது இளைஞர் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து விரிவான நடத்த நடத்த வேண்டுமென்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி கேன்டீனில் உள்ள உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்படும் என்றும் 14 நாட்களுக்குள் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சின்னசாமி மைதானத்தில் உள்ள கேண்டீனில் தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாக சென்னை - பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு முன்பாக பல புகார்கள் வந்ததாகவும், அதனால் தான் போட்டிக்கு முன்பே உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.