கிரிக்கெட் (Cricket)
null

உலக கோப்பை போட்டியில் விராட்கோலி, ஸ்டீவ் சுமித் முத்திரை பதிப்பார்கள்- கிரேக் சேப்பல்

Published On 2023-08-20 06:07 GMT   |   Update On 2023-08-20 06:18 GMT
  • 5 பேட்ஸ்மேன்களுமே அவர்களது அணிக்காக அதிக ரன்களை குவித்து உள்ளனர்.
  • உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடப்பதால் அந்த அணிக்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

மெல்போர்ன்:

கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் 'பேபுலஸ் போர்' (மிகச்சிறந்த நால்வர்) என்ற வார்த்தை பிரபலமானது. வீராட்கோலி (இந்தியா), ஜோரூட் (இங்கிலாந்து), வில்லியம்சன் (நியூசிலாந்து), ஸ்டீவ் சுமித் (ஆஸ்திரேலியா) ஆகியோர் இதில் இடம் பெற்றுள்ளனர்.

தற்போது இந்த அடை மொழியில் பாகிஸ்தானின் பாபர் ஆசம் 5-வதாக இணைந்துள்ளார். அதனால் 'பேப் 5' என அழைக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த 5 வீரர்களில் உலக கோப்பை போட்டியில் வீராட்கோலியும், ஸ்டீவ் சுமித் தான் முத்திரை பதிப்பார்கள் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான கிரேக் சேப்பல் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

இந்த 5 பேட்ஸ்மேன்களுமே அவர்களது அணிக்காக அதிக ரன்களை குவித்து உள்ளனர். இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பையில் இந்த 5 பேருமே ரன்களை குவிக்க வாய்ப்பு உள்ளது. ஒருநாள் போட்டி, டெஸ்ட், 20 ஓவர் என 3 வடிவிலான போட்டிகளிலும் சிறப்பாக இருப்பது வீராட்கோலி, ஸ்டீவ் சுமித் மட்டுமே.

இருவரும் இந்த உலக கோப்பை போட்டியில் தங்களது முத்திரையை பதிப்பார்கள் என்று நம்புகிறேன்.

உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடப்பதால் அந்த அணிக்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆசிய அணிகள் இந்தியாவில் சிறப்பாக செயல்படும்.

ஆனால் சமீபகாலமாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்கள் இந்தியாவில் அபாரமாக ஆடுகிறார்கள். இந்தியாவில் அவர்கள் தங்கள் நேரத்தை செலவிடு கிறார்கள். இதனால் உலக கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு அதிகமான வாய்ப்பு உள்ளது.

34 வயதான வீராட்கோலி டெஸ்டில் 8676 ரன்னும் (111 போட்டி) ஒருநாள் போட்டியில் 12,898 ரன்னும் (275), 20 ஓவரில் 4008 ரன்னும் (115) எடுத்துள்ளார். அவரது சராசரி முறையே 49.29, 57.32 மற்றும் 52.73 ஆக இருக்கிறது.

34 வயதான ஸ்டீவ் சுமித் டெஸ்டில் 9320 ரன்னும் (102), ஒருநாள் போட்டியில் 4939 ரன்னும் (142) எடுத்து உள்ளார். அவரது சராசரி முறையே 58.61 மற்றும் 44.49 ஆக இருக்கிறது.

Tags:    

Similar News