கிரிக்கெட் (Cricket)

பூரன்- ஹோப் சதம்: நேபாளம் அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் 339 ரன்கள் குவிப்பு

Published On 2023-06-22 10:50 GMT   |   Update On 2023-06-22 10:50 GMT
  • உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன.
  • நேபாளம் அணி 2-வது ஆட்டத்தில் அமெரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நேபாளம் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற நேபாளம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிங் - மேயர்ஸ் களமிறங்கினர். மேயர்ஸ் 1 ரன்னிலும் அடுத்து வந்த சார்லஸ் 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். சிறிது நேரத்தில் கிங் 42 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

இதனையடுத்து ஹோப்புடன் நிக்கோலஸ் பூரன் ஜோடி சேர்ந்து நேபாளம் அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். அதிரடியாக விளையாடிய பூரன் சதம் அடித்து அசத்தினார். அவர் 115 ரன்கள் எடுத்து நிலையில் ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடி கேப்டன் ஹோப்பும் சதம் அடித்தார். இவர் 132 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

அடுத்து வந்த ரோவ்மேன் பவல் 14 பந்தில் 29 ரன்கள் எடுத்து வெளியேறினார். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்கள் எடுத்தது.

நேபாளம் அணி முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியிடம் தோல்வியும் 2-வது ஆட்டத்தில் அமெரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News