கிரிக்கெட் (Cricket)

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து வார்னர் ஓய்வு

Published On 2024-06-25 08:13 GMT   |   Update On 2024-06-25 08:13 GMT
  • டி20 உலகக் கோப்பையில் இருந்து ஆஸ்திரேலிய அணி வெளியேறியது.
  • ஆஸ்திரேலிய அணிக்காக 18995 ரன்களை வார்னர் எடுத்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அரையிறுதி வாய்ப்பை ஆஸ்திரேலிய அணி தவறவிட்டது. சூப்பர் 8 சுற்றில் வங்காளதேச அணியிடம் மற்றும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, அதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவிடம் உதை வாங்கியது.

இதனால் ஆப்கானிஸ்தான் - வங்காளதேசம் மோதிய ஆட்டத்தின் முடிவில் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு செல்லுமா அல்லது வெளியேறுமா என்ற நிலையில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் அரையிறுதி கனவு கலைந்த நிலையில் அந்த அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அவர் ஆஸ்திரேலியா 18995 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 49 சதம் அடங்கும். ஆஸ்திரேலிய அணி 2 ஒருநாள் உலகக் கோப்பைகள் வென்ற அணியில் வார்னர் இடம் பிடித்துள்ளார். மேலும் ஒரு டி20 உலகக் கோப்பை அணியிலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அணியிலும் வார்னர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News