புதிய டெஸ்ட் கேப்டனாக தனஞ்சய டி சில்வா நியமனம்
- தனஞ்சய டி சில்வா தேசிய அணியில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
- இதுவரை 51 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி பத்து சதங்களையும், 13 அரைசதங்களையும் அடித்துள்ளார்.
ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் சுற்றுப்பயணங்களுக்கு முன்னதாக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கு வெவ்வேறு கேப்டன்களை இலங்கை கிரிக்கெட் தலைமை தேர்வாளர் உபுல் தரங்கா அறிவித்துள்ளார். 32 வயதான பேட்டிங் ஆல்ரவுண்டர் தனஞ்சய டி சில்வா டெஸ்ட் கேப்டனாகவும், 28 வயதான குசல் மெண்டிஸ், ஒருநாள் கிரிக்கெட் அணியை தலைமை தாங்க நியமிக்கப்பட்டனர். 26 வயதான வனிது ஹசரங்க, டி20 அணியை வழிநடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் உபுல் தரங்கா அறிவித்தபடி, தனஞ்சய டி சில்வா இலங்கை டெஸ்ட் அணிக்கு பொறுப்பேற்க உள்ளார். அவர் டெஸ்ட் கேப்டனாக திமுத் கருணாரத்னவுக்குப் பதிலாக, டெஸ்ட் போட்டிகளில் தலைமை தாங்கும் 18-வது வீரர். பிப்ரவரி 6-ஆம் தேதி தொடங்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியுடன் அவரது கேப்டன் பதவியை தொடங்க இருக்கிறார்.
தனஞ்சய டி சில்வா தேசிய அணியில் தொடர்ந்து விளையாடி வருகிறார். இதுவரை 51 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி பத்து சதங்களையும், 13 அரைசதங்களையும் அடித்துள்ளார். 3 அணிகளுக்கும் ஒரே கேப்டனாக இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன், ஆனால் தற்போது எங்களிடம் உள்ள வீரர்களால் அதைச் செய்ய முடியவில்லை" என்று தலைமை தேர்வாளர் உபுல் தரங்கா கூறியுள்ளார்.