ஆட்டத்தை மாற்றிய டோனியின் சிக்சர்: தினேஷ் கார்த்திக் சொன்ன ரகசியம்
- என்னை பொறுத்தவரை ஆட்டம் மாறியது டோனி அடித்த 110 மீட்டர் தூர சிக்சரால்தான்.
- மைதானத்திற்கு வெளியில் பந்து சென்றதால் யாஷ் தயாள் வீசுவதற்கு புதிய பந்து கிடைத்தது.
பெங்களூரு:
ஐபிஎல் தொடரின் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.
முதலில் ஆடிய பெங்களூரு அணி 218 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய சென்னை அணி 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
இந்நிலையில், போட்டி முடிந்ததும் வீரர்களின் ஓய்வறையில் தினேஷ் கார்த்திக் பேசியதாவது:
இந்தப் போட்டியின் சிறப்பான விஷயமே எம்.எஸ்.டோனி அந்த பந்தை மைதானத்திற்கு வெளியே அடித்தது தான். அதனால்தான் நனைந்து ஊறிய பந்திற்கு பதிலாக புதிய பந்து கிடைத்தது. நன்றாக வீச முடிந்தது.
பழைய பந்து ஈரமாக இருந்ததால், திட்டமிட்ட பகுதியில் பவுலிங் செய்ய முடியவில்லை. முதல் பந்திற்கு பின் யாஷ் தயாள் அசத்திவிட்டார். அப்படி ஒரு வெற்றியையும், கம்பேக்கையும் ஆர்சிபி அணி செய்துள்ளது.
அகமதாபாத் மைதானத்தில் ஒரு பணி காத்திருக்கிறது. அதனை வென்று அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவோம் என தெரிவித்தார்.