null
ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு செய்த எம்.எஸ்.டோனி.. என்ன ஸ்பெஷல் தெரியுமா?
- முன்னதாக EMotorad ,Cars24, Khatabook உள்ளிட்ட நிறுவனங்களில் டோனி முதலீடு செய்திருந்தார்
- வாடகை வாகன சர்வீஸ்களை தனித்துவமான வகையில் எலெக்ட்ரிக் கார்களை பயன்படுத்தி வழங்கும் குறிக்கோளுடன் இயங்குவருகிறது
இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனி ஆட்டோமொபைல் துறையில் தொடர்ந்து முதலீடுகளை செய்து வருகிறார். முன்னதாக EMotorad ,Cars24, Khatabook உள்ளிட்ட நிறுவனங்களில் டோனி முதலீடு செய்த நிலையில் தற்போது ஸ்டார்ட்டப் நிறுவனம் ஒன்றில் அதிகளவில் டோனி முதிலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹரியானா மாநிலம் குருகிராமில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஷ்டார்டப் ஆக தொடங்கப்பட்டு இயங்கி வரும் மின்சார வாகன நிறுவனம் புளூமார்ட்[BluSmart]. வளர்ந்து வரும் இந்நிறுவனம் ஓலா ஊபர் உள்ளிட்ட நிறுவனங்கள் அளிக்கும் வாடகை வாகன சர்வீஸ்களை தனித்துவமான வகையில் எலெக்ட்ரிக் கார்களை பயன்படுத்தி வழங்கும் குறிக்கோளுடன் இயங்குவருகிறது. தற்போதைக்கு டெல்லி,குருகிராம், நொய்டா, பெங்களூரு ஆகிய நகரங்களில் எலெக்ட்ரிக் கார் வாடகை சேவைகளை வழங்கிவரும் புளூமார்ட் இந்த வருட இறுதிக்குள் மும்பையில் தனது சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த வருடத்துன் தொடக்கத்தில் துபாயிலும் தனது சேவையை புளூமார்ட் அறிமுகப்படுத்தியிருந்தது. ப்ரீ சீரிஸ் நிதியுதவி சுற்று மூலம் புளூஸ்மார்ட் சுமார் 250 மில்லியன் டாலர்கள் முதலீடுகளை தற்போதுவரை ஈர்த்துள்ளது.
மேலும் ரூ.550 கோடி வரை வருமானம் ஈட்டி வருகிறது. பெரு நிறுவனங்களில் அல்லாமல் வளர்ந்து வரும் நிறுவனங்களில் டோனி தொடர்ந்து முதலீடு செய்து வருவது கவனிக்கத்தக்கது. வளர்ந்து வரும் சந்தையில் சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் புளூஸ்மார்டின் மின்சார வாகன சேவை பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.