கிரிக்கெட் (Cricket)

டி காக், மில்லர் அதிரடி: இங்கிலாந்து வெற்றிபெற 164 ரன்களை இலக்காக நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்கா

Published On 2024-06-21 16:14 GMT   |   Update On 2024-06-21 16:14 GMT
  • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 163 ரன்களை எடுத்தது.
  • டி காக் 38 பந்தில் 4 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 65 ரன் குவித்தார்.

செயிண்ட் லூசியா:

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெறும் சூப்பர் 8 சுற்று போட்டியில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, தென் ஆப்பிரிக்கா அணி முதலில் களமிறங்கியது. ஹென்ரிக்ஸ், டி காக் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

இருவரும் ஆரம்பம் முதல் அதிரடியாக ஆடினர். டி காக் அரை சதம் அடித்து அசத்தினார். முதல் விக்கெட்டுக்கு 86 ரன்கள் சேர்த்த நிலையில் ஹென்ரிக்ஸ் 19 ரன்னில் அவுட்டானார். டி காக் 38 பந்தில் 4 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 65 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

கிளாசன் 8 ரன்னிலும், மார்கிரம் ஒரு ரன்னிலும் அவுட்டாகினர். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய டேவிட் மில்லர் 28 பந்தில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களை எடுத்துள்ளது.

இதையடுத்து, 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.

Tags:    

Similar News