உலக கோப்பையை வென்றால் பாபர் ஆசம் பிரதமர் ஆவார்- கவாஸ்கர் கணிப்பு
- 1992 உலக கோப்பை தொடருடன் நடப்பு உலக கோப்பை தொடரை பாகிஸ்தான் ரசிகர்கள் ஒப்பிட்டு பேசி வருகிறார்கள்.
- இம்ரான்கானை போலவே பாகிஸ்தான் அணியின் தற்போதைய கேப்டன் பாபர் ஆசம் அந்நாட்டின் பிரதமர் ஆவார்
1992-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த 50 ஓவர் (ஒருநாள் போட்டி) உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகள் மோதி இருந்தது. இதில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று உலக கோப்பையை வென்றது. தற்போது 30 ஆண்டுகளுக்கு பிறகு அதே மண்ணில் 20 ஓவர் உலக கோப்பையில் இரு அணிகளும் எதிர் கொள்வதால் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
1992 உலக கோப்பை தொடருடன் நடப்பு உலக கோப்பை தொடரை பாகிஸ்தான் ரசிகர்கள் ஒப்பிட்டு பேசி வருகிறார்கள்.
இந்த நிலையில் இம்ரான்கானை போலவே பாகிஸ்தான் அணியின் தற்போதைய கேப்டன் பாபர் ஆசம் அந்நாட்டின் பிரதமர் ஆவார் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளரு மான கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் உலக கோப்பையை வென்றால் இன்னும் 26 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 2048ல் பாபர் ஆசம் பாகிஸ்தான் பிரதமராக வருவார் என்று வர்ணனையின் போது கவாஸ்கர் தெரிவித்தார். 1992-ல் உலக கோப்பையை வென்ற இம்ரான் கான் அதன் பின் 26 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் பிரதமரானார். அதே போன்று இந்த உலக கோப்பையை வென்றால் பாபர் ஆசம் பிரதமர் ஆவார் என்று நகைச்சுவையாக தெரிவித்தார்.