கிரிக்கெட் (Cricket)
null

ஒற்றை கையால் பேட்டிங் செய்த ஹனுமா விஹாரி- வைரலாகும் வீடியோ

Published On 2023-02-01 09:46 GMT   |   Update On 2023-02-01 10:43 GMT
  • உடைந்த மணிக்கட்டைப் பாதுகாக்க இடது கை பேட்ஸ்மானக பேட்டிங் செய்தார்.
  • விஹாரி ஐந்து முதல் ஆறு வாரங்கள் விளையாட கூடாது என்று கூறப்பட்டதாக தகவல் வெளியானது.

ரஞ்சிக் கோப்பை கால் இறுதிப் போட்டியில் ஆந்திரா - மத்திய பிரதேசம் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. இதில் டாஸ் வென்ற மத்திய பிரதேசம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆந்திரா அணியின் கேப்டன் விஹாரி 37 பந்துகளில் 16 ரன்கள் எடுத்திருந்த போது ஆவேஷ் கான் பந்து வீச்சில் அவருக்கு இடது கை மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதனால் பாதியிலேயே களத்தில் இருந்து வெளியேறினார். அந்த நேரத்தில், விஹாரி ஐந்து முதல் ஆறு வாரங்கள் விளையாட கூடாது என்று கூறப்பட்டதாக தகவல் வெளியானது.

ஆந்திரா அணி வீரர்கள் ரிக்கி புய் (149) மற்றும் கரண் ஷிண்டே (110) ஆகியோர் சிறப்பாக ஆடினர். ஒரு கட்டத்தில் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 323 ரன்கள் எடுத்திருந்தது. இவர்கள் இரண்டு பேரும் அவுட் ஆனதற்கு பிறகு அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினார்.


இதனால் 353 ரன்கள் 9 விக்கெட்டுகளை இழந்தது. இந்த நிலையில்தான் விஹாரி மீண்டும் பேட்டிங் செய்ய களமிறங்கினார். உடைந்த மணிக்கட்டைப் பாதுகாக்க இடது கை பேட்ஸ்மானக பேட்டிங் செய்தார். அவரது இடது கை முழுவதுமாக டேப் செய்யப்பட்ட நிலையில் ஒரு கையை மட்டுமே உபயோகித்து விளையாடினார்.

விஹாரி கிட்டத்தட்ட பத்து ஓவர்களில் 26 ரன்கள் எடுத்தார். அவர் 9-வது இடத்தில் இருந்த லலித் மோகனுடன், பார்ட்னர்ஷிப்பில் ஸ்கோரின் பெரும்பகுதியைச் செய்தார். ஆந்திரா 9 விக்கெட்டுக்கு 379 ரன்களுக்கு முன்னேறியது.

சிட்னியில், ஆர் அஷ்வினுடன் இணைந்து இந்தியாவுக்கான டெஸ்ட் போட்டியை காப்பாற்ற விஹாரி கிழிந்த தொடை எலும்புடன் பேட்டிங் செய்தார் என்பது குறிப்பிடத்தகக்து.

Tags:    

Similar News