கிரிக்கெட் (Cricket)
null

ஸ்ட்ரீக் மரணத்தில் நிலவும் குழப்பம் - ஓலங்கா புதிய தகவல்

Published On 2023-08-23 06:58 GMT   |   Update On 2023-08-23 07:05 GMT
  • ஸ்ட்ரீக் நேற்று மரணம் அடைந்ததாக செய்திகள் வெளியாகின.
  • அவர் ஸ்ட்ரீக்கிடம் பேசிய மெசேஜ்யை டுவிட்டரில் ஸ்கிரீன் ஷாட் எடுத்து பதிவிட்டுள்ளார்.

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஹீத் ஸ்ட்ரீக். இவர் நேற்று மரணம் அடைந்ததாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் ஸ்ட்ரீக் இறந்ததாக வெளியான தகவல் வதந்தி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உயிருடன் இருப்பதாக அவரே வாட்ஸ்அப்பில் தெரிவித்துள்ளார்.

இது முழு வதந்தியாகும். பொய்யான தகவல் பரப்பபட்டுள்ளது. நான் உயிருடன் இருக்கிறேன். நன்றாகவும் உள்ளேன். இந்த செய்தியை கேட்டு நான் மிகவும் வருத்தம் அடைந்தேன். சமூக ஊடகங்களில் சரி பார்க்கப்படாமல் தகவல்கள் பரவுகிறது. என்னை பற்றி தகவல் அனுப்பியவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்.

இவ்வாறு ஸ்ட்ரீக் அந்த செய்தியில் தெரிவித்து உள்ளார்.

மேலும் இதனை பொய்யான செய்தி என சக வீரரான ஹென்றி ஒலங்காவும் தெரிவித்துள்ளார். அவர் ஸ்ட்ரீக்கிடம் பேசிய மெசேஜ்யை டுவிட்டரில் ஸ்கிரீன் ஷாட் எடுத்து பதிவிட்டுள்ளார்.

ஹீத் ஸ்ட்ரீக்கின் மறைவு பற்றிய வதந்திகள் மிகைப்படுத்தப்பட்டவை என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும். நான் அவரிடம் தான் கேட்டேன். மூன்றாவது நடுவர் அவரை திரும்ப அழைத்துள்ளார். அவர் உயிருடன் இருக்கிறார் மக்களே.

இவ்வாறு அந்த பதிவில் கூறினார்.

ஸ்ட்ரீக் ஜிம்பாப்வே அணிக்காக 65 டெஸ்ட், 189 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4933 ரன்கள் அடித்ததுடன், 455 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

2005-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஸ்ட்ரீக், பல்வேறு அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News