கிரிக்கெட் (Cricket)

இலங்கை, நியூசிலாந்து தொடர்: சஞ்சு சாம்சன் இந்திய அணியில் இடம் பெறுவார்: வாசிம் ஜாபர் நம்பிக்கை

Published On 2022-12-27 06:12 GMT   |   Update On 2022-12-27 06:12 GMT
  • இலங்கை மற்றும் நியூசிலாந்து என ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் நிச்சயம் சஞ்சு சாம்சன் அணியில் இடம் பிடிப்பார்.
  • 2015-ல் இந்திய அணியில் அறிமுகமான சஞ்சு 11 ஒருநாள் மற்றும் 16 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

புதுடெல்லி:

அடுத்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் இலங்கை மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட உள்ளன. இந்தத் தொடரில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என தான் நம்புவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 3 முதல் ஜனவரி 15 வரையில் இலங்கை அணியும். அதன் பின்னர் ஜனவரி 18 முதல் பிப்ரவரி 1 வரை நியூசிலாந்து கிரிக்கெட் அணியும், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடுகின்றன.

"இலங்கை மற்றும் நியூசிலாந்து என ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் நிச்சயம் சஞ்சு சாம்சன் அணியில் இடம் பிடிப்பார் என நம்புகிறேன். அது அவருக்கு நிலையானதாக இருக்கும்" என ஜாபர் தெரிவித்துள்ளார்.

28 வயதான சஞ்சு சாம்சன், கடந்த 2015-ல் இந்திய அணியில் அறிமுகமானார். இதுநாள் வரையில் அவர் மொத்தம் 11 ஒருநாள் மற்றும் 16 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் சஞ்சு 330 ரன்களும், டி20 கிரிக்கெட்டில் 296 ரன்களும் எடுத்துள்ளார். ஆனாலும் அணியில் இவருக்கான வாய்ப்பு அணியில் தொடர்ந்து கிடைப்பதில்லை. இந்த சூழலில் அவருக்கு ஆதரவாக ஜாபர் பேசியுள்ளார்.

Tags:    

Similar News