கிரிக்கெட் (Cricket)

ஐசிசி-யின் மதிப்பிற்குரிய ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் சேவாக் பெயர்

Published On 2023-11-13 10:30 GMT   |   Update On 2023-11-13 10:30 GMT
  • கவாஸ்கர், டெண்டுல்கர், கும்ப்ளே, ராகுல் டிராவிட் ஆகியோர் இந்த பெருமையை பெற்றுள்ளனர்.
  • இவருடன் டயானா எடுல்ஜி, அரவிந்த டி சில்வா ஆகியோரும் பட்டியலில் இணைந்து உள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைப் படைத்த வீரர்களை கவுரவிக்கும் வகையில், ஐசிசி அவர்கள் பெயர்களை ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இணைக்கும். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவாக், வீருாங்கனை டயனா எடுல்ஜி, இலங்கையின் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா ஆகியோர் இந்த பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது இவர்களுடன் இந்த பட்டியலில் 112 பேர் இடம் பிடித்துள்ளனர். இந்தியாவின் முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கர், பிஷன் சிங் பெடி, கபில் தேவ், அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், வினோ மன்கட் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள சேவாக், இரண்டு முறை முச்சதம் அடித்துள்ளார். சேவாக் 103 டெஸ்ட், 251 ஒருநாள் மற்றும் 19 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

டெஸ்ட் போட்டியில் 23 சதங்களும், ஒருநாள் போட்டியில் 15 சதங்களும் அடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அதிகபட்சமாக 219 ரன்கள் குவித்துள்ளார்.

டெஸ்ட் போட்டியில் 8586 ரன்களும், ஒருநாள் போட்டியில் 8273 ரன்களும் அடித்துள்ளார்.

Tags:    

Similar News