கிரிக்கெட் (Cricket)

100-வது டெஸ்ட் கேப்-ஐ எனது தாய்க்கு சமர்ப்பிக்க விரும்புகிறேன்: உருக்கமாக பேசிய ஜானி பேர்ஸ்டோ

Published On 2024-03-05 16:09 GMT   |   Update On 2024-03-05 16:09 GMT
  • தர்மசாலாவில் இந்தியாவுக்கு எதிரான இங்கிலாந்தின் ஐந்தாவது ஆட்டம் பேர்ஸ்டோவின் 100 வது டெஸ்ட் போட்டி ஆகும்.
  • என்னுடைய 100வது டெஸ்ட் கேப்-ஐ எனது தாய்க்கு சமர்ப்பிக்க விரும்புகிறேன். வலிமைக்கு ஒரு உருவம் இருந்தால் அது அவர்தான்.

இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் மார்ச் 7 ஆம் தேதி தொடங்கவுள்ளது. தர்மசாலாவில் இந்தியாவுக்கு எதிரான இங்கிலாந்தின் ஐந்தாவது ஆட்டம் இங்கிலாந்து அணி வீரர் ஜானி பேர்ஸ்டோவின் 100 வது டெஸ்ட் போட்டி ஆகும்.

இந்நிலையில், ஜானி பேர்ஸ்டோ தனது 100 வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய பேர்ஸ்டோ,"100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது என்பது மிகவும் பெரிய விஷயம். என்னுடைய 100வது டெஸ்ட் கேப்-ஐ எனது தாய்க்கு சமர்ப்பிக்க விரும்புகிறேன். வலிமைக்கு ஒரு உருவம் இருந்தால் அது அவர்தான். எனது தந்தை இறக்கும்போது 10 வயதுக்குட்பட்ட 2 குழந்தைகளை வைத்துக்கொண்டு 3 இடங்களில் பணிபுரிந்து எங்களை வளர்த்தார். அவர் இரண்டு முறை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அப்போதும் எனது அம்மா வலிமையாக இருந்தார் என்று தெரிவித்துள்ளார்.

தரம்சாலா டெஸ்ட் போட்டி இந்தியாவின் ரவிச்சந்திரன் அஷ்வினுக்கும் 100வது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. 5 டெஸ்ட் கொண்ட இரு நாடுகளுக்கு இடையிலான இந்த டெஸ்ட் தொடரை இந்தியா ஏற்கனவே 3-1 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்டது 

Tags:    

Similar News