null
டி20 போட்டியில் உலக சாதனை படைக்கும் இந்திய வீரர் புவனேஸ்வர்குமார்
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்த தொடரில் புவனேஸ்வர்குமார் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வந்துள்ளார்.
- பவர் பிளேயில் 130 ஓவர் வீசிய இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் புவனேஷ்வர்குமார் முதல் இடத்தில் உள்ளார்.
தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 4-வது டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு குஜராத் மாநிலம் ராஜ்கோர்ட்டில் நடக்கிறது.
இந்த போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் உலக சாதனை படைக்க உள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்த தொடரில் புவனேஸ்வர்குமார் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வந்துள்ளார். சீனியர் வேகப்பந்து வீச்சாளர்களில் இவர் மட்டுமே அணியில் இடம் பெற்றுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக பும்ரா, முகமது சமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இன்றைய போட்டியில் பவர் பிளேயில் ஒரு விக்கெட் எடுத்தால் புவனேஸ்வர்குமார் உலக சாதனை படைப்பார். பவர் பிளேயில் அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் புவனேஸ்வர் குமார் 33 விக்கெட்டுகள் எடுத்து 3-வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த சாமுவேல் பத்ரி (33), இரண்டாது இடத்தில் நியூசிலாந்து அணியை சேர்ந்த டிம் சவுத்தி(33) ஆகியோர் உள்ளனர்.
டி20 வரலாற்றில் பவர்பிளேயில் 100 ஓவர்களுக்கு மேல் வீசிய முதல் மூன்று பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர்குமார், பத்ரீ மற்றும் சவுத்தி ஆகியோர் ஆவர். டி20 போட்டிகளில் பவர் பிளேயில் 130 ஓவர் வீசி இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் புவனேஷ்வர்குமார் முதல் இடத்தில் உள்ளார்.
டி20 போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்த இந்திய வீரர்களில் பும்ராவை(67 விக்கெட்) முந்துவதற்கு புவனேஸ்வர்குமாருக்கு (64 விக்கெட்) வாய்ப்பு இருக்கிறது. இந்த 2 போட்டிகளில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினால் அவரை முந்தி விடுவார். முதல் இடத்தில் சாஹல் உள்ளார். அவர் 72 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.
முதல் மூன்று போட்டிகளில் புவனேஸ்வர்குமார் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சிறந்த பந்து வீச்சாக இரண்டாவது டி20-யில் 4 ஒவர்கள் பந்து வீசி 13 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.