கடைசி டி20-யில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது இந்தியா: SKY சதம், குல்தீப் 5 விக்கெட் வீழ்த்தினார்
- ஜெய்ஸ்வால் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- தென்ஆப்பிரிக்கா அணியால் 13.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடிந்தது.
இந்தியா- ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பீல்டிங் தேர்வு செய்தது.
அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 60 ரன்கள் எடுத்தார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார். அவர் 56 பந்தில் 100 ரன்கள் அடிக்க இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது.
பின்னர் 202 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. இந்திய பந்து வீச்சாளர்கள் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. இதனால் 13.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 95 இடங்களில் சுருண்டது. குல்தீப் யாதவ் 2.5 ஓவரில் 17 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜடேஜா 2 விக்கெட் வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 1-1 என சமன் செய்தது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. 2-வது போட்டியில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றிருந்தது.
சதம் அடித்த சூர்யகுமார் யாதவ் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வென்றார்.