கிரிக்கெட் (Cricket)

5 Out Of 5.. ஐபிஎல் இறுதிப்போட்டியில் தோல்வியடையாத ஹர்திக் பாண்ட்யா

Published On 2023-05-29 12:52 GMT   |   Update On 2023-05-29 12:52 GMT
  • பாண்டியா ஐந்து ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
  • 4 போட்டி மும்பை அணிக்காகவும் 1 குஜராத் அணிக்காகவும் கோப்பையை கைப்பற்றியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் டோனி தலைமையிலான சிஎஸ்கே அணியும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியும் இன்று மோதுகிறது.

இந்த போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றால் ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஹர்திக் பாண்ட்யா பங்கேற்ற 6 முறையும் அந்த அணி கோப்பையை கைப்பற்றிய சாதனையை எட்டும்.

பாண்டியா இதுவரை ஐந்து ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் விளையாடிய நிலையில் 5 போட்டியிலும் அவர் இடம் பெற்ற அணிகள் வெற்றி வாகை சூடியுள்ளன. 2015, 2017, 2019, 2020-ல் மும்பை அணியில் இருந்தார். பின்னர் 2022-ல் குஜராத் அணியை வழிநடத்தினார்.

மறுபுறம், டோனி இதுவரை 10 இறுதிப் போட்டிகளில் விளையாடியுள்ளார். 9 சிஎஸ்கே அணிக்காவும் 1 புனே அணிக்காகவும் விளையாடியுள்ளார். அதில் அவர் 4 வெற்றிகளை 2010, 2011, 2018 மற்றும் 2021-ல் சிஎஸ்கே உடன் பெற்றுள்ளார். எனவே இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களில் பாண்ட்யாவை விட டோனி பின் தங்கிய நிலையில் உள்ளார்.

இன்றைய ஆட்டத்தில் குஜராத் வெற்றி பெற்றால், ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் 3-வது அணியாக இருக்கும். சிஎஸ்கே அணி 2011-ல் மற்றும் மும்பை 2020-ல் தொடர்ந்து கோப்பை கைப்பற்றியது. மேலும், சிஎஸ்கே வெற்றி பெற்றால், மும்பை அணியின் சாதனையை சமன் செய்யும். மும்பை 5 முறையும் சென்னை 4 முறையும் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளன.

Tags:    

Similar News