கிரிக்கெட் (Cricket)

மும்பை சரியான நேரத்தில் எழுச்சியை பெற்றுள்ளது- கேமரூன் கிரீன்

Published On 2023-05-26 06:34 GMT   |   Update On 2023-05-26 06:34 GMT
  • இந்த தொடரின் ஆரம்பத்தில் மும்பை அணி தடுமாறியது. பின்னர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
  • குஜராத் அணி கடும் சவாலாக இருக்கும். ஆனால் மும்பை அணி தனது திறன்களில் நம்பிக்கை கொண்டுள்ளது.

அகமதாபாத்:

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் 20 ஓவர் போட்டி தொடர் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இதன் இறுதிப் போட்டிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தகுதி பெற்றுவிட்டது.

இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் நடக்கும் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

மும்பை அணி 14 ஆட்டத்தில் 8 வெற்றி, 6 தோல்வி பெற்று 16 புள்ளிகளை பெற்று 4-வது இடத்தை பிடித்து பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. வெளியேறுதல் சுற்றில் லக்னோவை தோற்கடித்தது.

இந்த தொடரின் ஆரம்பத்தில் மும்பை அணி தடுமாறியது. பின்னர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இது தொடர்பாக மும்பை அணியின் ஆல்ர வுண்டர் கேமரூன் கிரீன் கூறியதாவது:-

இத்தொடரை நாங்கள் மெதுவாக தொடங்கிேனாம். ஆனால் சரியான நேரத்தில் உச்சத்தை அடைய வேண்டும். அந்த எழுச்சியை நாங்கள் பெற்று இருக்கிறோம்.

சூர்யகுமார் யாதவுடன் பேட்டிங் செய்வது எளிதான வேலை என்று நினைக் கிறேன். குஜராத் ஒரு கடினமான அணி. ஆனால் நாங்கள் எல்லா நம்பிக்கை யுடனும் அவர்களுடன் மோதுேவாம். அவர்களிடம் வலுவான செயல்திறன், விளையாட்டின் விரிவான அணுகுமுறை உள்ளது.

குஜராத் அணியின் தொடக்க பேட்ஸ்மேன்கள் அற்புதமான வடிவத்தையும் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத்கான், நூர் அகமது செயல் திறனையும் பெற்று உள்ளனர்.

குஜராத் அணி கடும் சவாலாக இருக்கும். ஆனால் மும்பை அணி தனது திறன்களில் நம்பிக்கை கொண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.17.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட கேமரூன் கிரீன் இதுவரை 15 ஆட்டத்தில் 422 ரன்கள் எடுத்துள்ளார். ஒரு சதம், இரண்டு அரை சதம் அடித்துள்ளார். 6 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

Tags:    

Similar News