கிரிக்கெட் (Cricket)

காட்டடியடித்த பேபி ஏபிடி- வீடியோ வெளியிட்ட மும்பை அணி

Published On 2023-03-29 08:18 GMT   |   Update On 2023-03-29 08:18 GMT
  • டெவால்ட் ப்ரீவிஸ் பேட்டிங் செய்யும் வீடியோவை மும்பை அணி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
  • மும்பை அணி கடந்த இரு சீசன்களாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

மும்பை:

16-வது ஐபிஎல் தொடர் நாளை மறுநாள் தொடங்குகிறது. இதில் சென்னை, மும்பை, கொல்கத்தா, குஜராத், ராஜஸ்தான் உட்பட மொத்தம் 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

ஐபிஎல் தொடரில் அதிகப்படியான கோப்பைகளை வென்ற மும்பை அணி கடந்த இரு சீசன்களாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த சீசனில் மீண்டும் பழைய பார்முக்கு வந்து வெற்றி கோப்பையை மும்பை கைப்பற்ற வேண்டும் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

இந்நிலையில் பேபி ஏபிடி என அழைக்கப்படும் டெவால்ட் ப்ரீவிஸ் பேட்டிங் செய்யும் வீடியோவை மும்பை அணி சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம், டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் டெவால்ட் ப்ரீவிஸ் போடுகிற பந்துகளையெல்லாம் சிக்சருக்கு விரட்டுகிறார். அடி ஒவ்வொன்றும் இடி மாதிரி விழுகிறது.

இந்த வீடியோ பார்த்த மும்பை அணி ரசிகர்கள், மற்ற அணிகளை மிரட்டும் வகையில் உள்ளதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News