டெல்லிக்கு பின்னடைவு: மும்பைக்கு எதிரான போட்டியில் இருந்து முன்னணி வீரர் விலகல்
- டெல்லி அணி இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
- மார்ஷ் 20, 23, 18, 0 என சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நாளை மதியம் 3.30 தொடங்குகிறது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் காயத்தால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் இருந்து விலகியுள்ளார். இந்த டெல்லி அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
டெல்லி அணி இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மிட்செல் மார்ஷ் பஞ்சாப் அணிக்கெதிராக 12 பந்தில் 20 ரன்னும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக 12 பந்தில் 23 ரன்களும், சிஎஸ்கே-வுக்கு எதிராக 12 பந்தில் 18 ரன்களும் அடித்துள்ளார். கொல்கத்தாவிற்கு எதிராக டக்அவுட் ஆனார். இதுவரை பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் மிகப்பெரிய அளவில் பிரகாசிக்கவில்லை.